ETV Bharat / bharat

அமெரிக்க ஊடகங்களின் செயல் ‘இந்திய ஊடகங்களுக்கான பாடம்’ - சசி தரூர்

author img

By

Published : Nov 6, 2020, 6:52 PM IST

Updated : Nov 6, 2020, 9:03 PM IST

டெல்லி: பொய்களை பரப்புவதாக ட்ரம்பின் பேட்டியை நிறுத்திய அமெரிக்க செய்தி நிறுவனங்களின் செயல் இந்திய ஊடகங்ளுக்கான பாடம் என மக்களவை உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பொய்யான பேட்டியை நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள், ‘இந்திய ஊடங்களுக்கான பாடம்’ -சசி தரூர்!
ட்ரம்ப் பொய்யான பேட்டியை நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள், ‘இந்திய ஊடங்களுக்கான பாடம்’ -சசி தரூர்!

உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார்.

அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார். ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது சுமார் 17 நிமிடங்களுக்கு மேலாக பேசிய ட்ரம்ப், ஜனநாயக கட்சியினர் வாக்குகளை சட்டவிரோதமாக எங்களிடம் இருந்து திருட முயற்சி செய்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

இந்த சந்திப்பின் ஒளிபரப்பை சில அமெரிக்க செய்தி நிறுவனங்கள் ட்ரம்ப் தவறான செய்திகளை கூறுவதாகவும், பொய்களை பரப்புவதாகவும் கூறி நிறுத்திவிட்டன.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர், இது இந்திய ஊடகங்களுக்கான பாடம். இங்கு ஒருமைப்பாடு நிரந்தரமானதே தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இல்லை.

பிரகாஷ் ராஜ் ட்வீட்
பிரகாஷ் ராஜ் ட்வீட்

பத்திரிகை சுதந்திரம் எப்போது மதிக்கப்படுகிறது என்றால், அதை நாம் சரியாக பயன்படுத்தும்போது மட்டுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சசி தரூர் ட்வீட்
சசி தரூர் ட்வீட்

இதனை ரீ-ட்வீட் செய்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “மக்களாகிய நாம் ஏன் டிவியை அணைக்கக் கூடாது” என்றுள்ளார்.

இதையும் படிங்க...ட்ரம்பின் வார்த்தைகளைக் கொண்டே அவரை பழிதீர்த்த 'கிரேட்'டா!

Last Updated : Nov 6, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.