ETV Bharat / bharat

ஒரே ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான சைபர் தாக்குதல்- மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

author img

By

Published : Mar 26, 2022, 6:17 AM IST

இந்திய கணினி அவசர உதவிக் குழுவான CRET இன் கணக்கீட்டின்படி இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான சைபர் தாக்குதல் நடந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சத்துக்கும் மேல் சைபர் தாக்குதல்- மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சத்துக்கும் மேல் சைபர் தாக்குதல்- மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

டெல்லி: இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக CRET(Indian Computer Emergency Response Team) இல் பதிவாகியுள்ளது என மின்னனுவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் CRET இன் முக்கிய பணி இந்தியா முழுவதும் நடக்கும் சைபர் தாக்குதலை கணக்கீடுவதாகும். இதன் அறிக்கையில் 2021 ஆம் ஆண்டில் 14 லட்சத்து 2ஆயிரத்து 809 சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகர் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் மின்வணிகம், எரிசக்தி, நிதி, அரசு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் இணைய தாக்குதல் நடந்துள்ளதாக CRETஇல் பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக அரசின் தேசிய சைபர் பாதுகாப்பு துறை மூலம் மிகப்பெரிய சைபர் தாக்குதலில் முன் கூட்டியே எச்சரிக்கை விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'இந்த ஆண்டின் இறுதிக்குள் 5G சேவை வரப்போகுது' - மத்திய தகவல் தொடர்புத் துறை தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.