ETV Bharat / bharat

உள்நாட்டு விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்... கட்டணம் குறையுமா..? அதிகரிக்குமா..?

author img

By

Published : Aug 11, 2022, 2:04 PM IST

Updated : Aug 11, 2022, 3:32 PM IST

மத்திய அரசு உள்நாட்டு விமான கட்டணங்களின் உச்ச வரம்பை நீக்கப்போவதாக அறிவித்துள்ளதால், விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Ministry of Civil Aviation announces to remove airfare bands on domestic flights from August 31
Ministry of Civil Aviation announces to remove airfare bands on domestic flights from August 31

டெல்லி: கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையில் பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் விமான சேவை நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த கட்டத்தணத்தை மட்டுமே வசூலித்துவந்தன. இந்த கட்டண உச்ச வரம்பை, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு நீக்கப்போவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா அறிவித்துள்ளார்.

இதனால் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல கட்டணத்தை நிர்ணயிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. அதோடு தங்கள் நிறுவன விமானங்களில் பயணிகளை நிரப்ப குறைந்த விமானக் கட்டணங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.

இதன் மூலம் கடைசி நிமிட டிக்கெட்டுகள் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாற்றொரு பக்கம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக அரசு நிர்ணயித்த வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்று விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்ததால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு விமான சேவையில் குறைந்தபட்சம் 2,900 ரூபாய் முதல் அதிகபட்சம் 8,500 ரூபாய் வரை நிறுவனங்கள் வசூலிக்கலாம் என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு!

Last Updated : Aug 11, 2022, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.