ETV Bharat / bharat

Weekly Horoscope: மே மாதத்தின் இரண்டாவது வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

author img

By

Published : May 7, 2023, 7:15 AM IST

Updated : May 10, 2023, 8:57 AM IST

மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான மே மாதம் இரண்டாவது வாரத்திற்கான ராசி பலன்களை காண்போம். இது மே 7-ல் தொடங்கி மே 13-ஆம் தேதி வரையிலான ராசி பலன்களை உள்ளடக்கியதாகும்.

Weekly Horoscope
Weekly Horoscope

மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாக உள்ளது. வாரத் தொடக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். இதன் காரணமாக வாரத் தொடக்கத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு அன்பு அதிகரிக்கும். இருப்பினும், திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் ஏற்படலாம்.

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் வலுவாக இருக்கும். உங்கள் பணி வேகமெடுக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். எதிர்காலத்திற்குத் தேவையானதைச் சேமிக்கும் முயற்சிகளையும் செய்வீர்கள்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமைகிறது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் அதிகரித்து வரும் டென்ஷனால் சற்று மனக்கசப்பைக் காணலாம். இதற்குத் தீர்வுகாண உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பேச வேண்டும். இருப்பினும், காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கைக்காக நீங்கள் நிறைய செலவு செய்வீர்கள். இதன் காரணமாகப் பொருளாதார நிலையும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

இந்த வாரம் செலவுகள் நிறைந்ததாக இருக்கும். இப்போது உங்கள் வேலையை மேம்படுத்துவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் சில புதிய நபர்களைச் சந்தித்து உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நீங்கள் எடுக்கும் சில புதிய முயற்சிகள் மூலம் நல்ல வருமானமும் லாபமும் பெறுவீர்கள். இருப்பினும், அந்த முடிவை எடுப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையும் வலுவாக இருக்கும். வியாழனின் அருளால், திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் பதற்றம் நீங்கும். பரஸ்பர புரிதல் அதிகரிப்பதன் காரணமாக உறவு மேம்படும். இதன் காரணமாக வீட்டின் சூழ்நிலையும் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.

சொத்து விற்பனையிலும் லாபம் உண்டாகும். இந்த வாரம் காதல் வாழ்க்கைக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மகிழ்ச்சிக்காக நிறைய செலவு செய்வீர்கள். வருமானமும் அபரிமிதமாக இருக்கும். வேலை செய்பவர்களின் நிலைமை நன்றாக இருக்கும். உங்களின் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் புதிய வேலைகளைத் தொடங்க வாய்ப்புகளும் கிடைக்கும்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும், குடும்ப வாழ்க்கையில் சில பதட்டங்கள் இருக்கலாம். செலவுகள் அதிகரிக்கலாம். மொபைல் போன் அல்லது ஆடைகள் போன்ற சில புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில சச்சரவுகள் நிலவும்

வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களின் திட்டங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாரத் தொடக்கத்திலிருந்து, நீங்கள் உங்கள் மனதைப் பன்படுத்தத் தொடங்குவீர்கள். மேலும் உங்கள் வேலை எவ்வாறு முன்னேறுகிறது என்பதில் கவனம் செலுத்துவீர்கள். இந்த வாரம் உங்களின் முக்கியத்துவம் முழுவதும் வருமானத்தை அதிகரிப்பதில் தான் இருக்கும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்குக் கலவையான பலன் கிடைக்கும் வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் திருப்தியாக இருப்பார்கள், அதே சமயம் காதலிப்பவர்கள் தங்கள் உறவையும் அன்பையும் அனுபவித்து மகிழ்வார்கள். உங்கள் தாய் மீதான அன்பு அதிகரிக்கும். இந்த வாரம் நீண்ட பயணம் செல்லலாம். நீங்கள் சில புதிய முதலீடுகளைச் செய்வீர்கள், அதில் நீங்கள் ஏற்ற தாழ்வுகளைக் காணலாம். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதே பலன் தரும்.

இப்போதைக்கு உங்கள் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் மற்றும் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களின் நிலை நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் மேலதிகாரியை இழிவான வார்த்தைகளால் பேசுவதால் நீங்கள் சிக்கலில் தள்ளப்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக உள்ளது. மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக உள்ளது. படிப்புடன் புதிதாக எதாவது கற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்குச் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, முன்னேறுவதற்கான வழிமுறைகளைப் புரிந்துகொள்வீர்கள். காதலிப்பவர்கள் தங்கள் உறவில் சில பதற்றத்தை உணரலாம். ஆனால் மறுபுறம், நீண்ட நம்பிக்கையின் சூழ்நிலை இருக்கும், இதன் காரணமாக இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும்.

வேலையில் இருக்கும் ஒருவருடன் நீங்கள் ஆழமான நட்பைப் பெறுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் தனிப்பட்ட உறவுகளிலும் முன்னேறலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறிது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனால் உங்கள் வேலையும் பாதிக்கப்படலாம். வியாபாரம் தொடர்பான முயற்சிகளும் மெதுவாகவே நடக்கும். இருப்பினும், உங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர இன்னும் சிறிது காலம் எடுக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. இப்போது உங்கள் மனதில் உள்ளதை அவர்களிடம் சொல்வதன் மூலம் நீங்கள் இல்லற வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் மனைவியை சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். நீங்கள் உங்கள் வேலையிலிருந்து நேரத்தை ஒதுக்கி, உங்கள் மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடு மற்றும் சில புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உங்கள் வியாபாரத்தை மிக வேகமாக வளரச் செய்யும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு தங்கள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கலாம். ஒரு அட்டவணையை உருவாக்கி அதற்கேற்ப முன்னேறுவதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த வாரம் முழுவதும் பயணங்களுக்கு ஏற்றது.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் சில செலவுகள் இருக்கலாம். வீட்டு வேலைகள் நிறைய இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சற்று சுமாராக இருக்கும். யாரிடமாவது சண்டை போடும் வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் மனதில் பல குழப்பங்கள் இருக்கலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புதிய திட்டங்கள் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரிப்பீர்கள். அன்றாட பணியின் காரணமாக இருக்கும் மன அழுத்தம் மாலையில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் போது மறையும்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக உள்ளது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பரஸ்பர அன்பும் காதலும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மீது கவனம் கொள்ள வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் பலவீனமாக இருக்கும். உங்கள் உறவில் எதிர் விளைவை ஏற்படுத்துவது போன்ற எதையும் செய்யாதீர்கள். இந்த வாரத்தைக் கவனத்துடன் கடந்து செல்ல வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் வரலாம். எனவே உங்கள் வேலையில் அதிக கவனம் கொள்ள வேண்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத் தரும் வாரமாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு தங்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படலாம். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. உங்களுக்கிடையேயான உறவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிடலாம். லட்சியங்கள் நிறைவேறுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட எந்த ஆசையும் நிறைவேறும்.

நீங்கள் உங்கள் வேலையில் நல்ல பதவியைப் பெறுவீர்கள். இதன் காரணமாக உங்கள் சம்பளமும் அதிகரிக்கும். மேலும் நீங்கள் பொருளாதார ரீதியாகவும் பயனடைவீர்கள். வியாபாரம் செய்பவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். உங்கள் வியாபார ஒப்பந்தம் உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தத்தைக் கொண்டுவரும் மற்றும் நீங்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதனால் பணி இடத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

வியாபாரம் செய்பவர்களுக்குச் சாதகமான காலம். உங்கள் திட்டங்கள் பயனளிக்கும். மாணவர்கள் இப்போது படிப்பில் கவனம் செலுத்துவதோடு, மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இது அவர்களின் முழு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். நீங்கள் அதிகமாக வேலை செய்வதன் காரணமாக உடல் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை தனது விருப்பங்களை உங்கள் முன் வைப்பார், அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். இது உங்கள் உறவை மேலும் சிறப்பாக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும், உங்கள் உறவின் வரம்புகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும், அதனால் உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ரிஸ்க் எடுப்பீர்கள், புதிதாக ஏதாவது செய்ய நினைப்பீர்கள். வியாபாரம் வேகமடையும், உங்கள் வருமானமும் அதிகரிக்கும். செலவுகள் குறைவாக இருக்கும், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

Last Updated : May 10, 2023, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.