ETV Bharat / bharat

Delhi Fire : டெல்லி அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து! தலைநகரை தொடரும் சோதனைகள்!

author img

By

Published : Jul 15, 2023, 8:13 PM IST

மத்திய டெல்லியின் பரகம்பா சாலையில் உள்ள கட்டடத்தின் 9வது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

Delhi
Delhi

டெல்லி : மத்திய டெல்லி பரகம்பா சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தீப் பற்றியது. பரகம்பா சாலையில் உள்ள டிசிஎம் கட்டடத்தில் மாலையில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. மாலை 6.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 10 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

டிசிஎம் கட்டடத்தின் 9வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 9வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு பணியில் சிறிது சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், அது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்தில் மழைக் கொட்டிக் கொண்டு இருந்த நேரத்தில் கட்டடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கனமழை மற்றும் யமுனை நதியில் ஏற்பட்டு உள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக தலைநகர் டெல்லி தத்தளித்து வருகிறது. இந்நிலையில், அடுக்குமாடி கட்டடத்தில் தீப்பற்றிய சம்பவம் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஜூலை 12ஆம் தேதி மயபூரியில் உள்ள மகேந்திர நிறுவனத்தின் சேவை மையத்தில் தீப்பற்றிய நிலையில், லட்சக்கணக்கில் மதிப்புடைய கார்கள் தீயில் கருகி சேதமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மின்னல் தாக்கி 24 பேர் பலி... முதலமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.