ETV Bharat / bharat

சரத் பவார் - அஜித் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் புயல் வீசுமா?

author img

By

Published : Aug 13, 2023, 3:33 PM IST

Ajit pawar Meet Sharad pawar: அஜித் பவார் - சரத் பவார் இருவரும் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் சரத் பவார் இணையுமாறு அஜித் பவார் வலியுறுத்தியதாக தகவல் கூறப்படுகிறது.

Maharashtra
Maharashtra

புனே : மகாராஷ்டிர துணை முதமைச்சர் அஜித் பவார், தனது மாமாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடத்தி ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையின் போது பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணியில் சரத் பவார் இணையுமாறு அஜித் பவார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் அஜித் பவாரின் இந்த தீர்மானத்தை சரத் பவர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களை திரட்டிக் கொண்டு ஆளும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் கடந்த ஜூலை மாதம் அஜித் பவார் இணைந்தார்.

தொடர்ந்து மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அஜித் பவார் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் தொடர் இழுபறி நீடித்த வந்த நிலையில், ஒருவழியாக இறுதி செய்யப்பட்டது.

துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டது. அதேபோல் அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக தனஞ்செய முண்டேவுக்கு விவசாயம், திலீப் வால்சே பாட்டீலுக்கு கூட்டுறவு, ஹசன் முஷ்ரீப் மருத்துவக் கல்வி, அதிதி தாட்கரேவுக்கு பெண்கள் மட்டும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அஜித் பவார் - சரத் பவார் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னர் இரண்டு முறைக்கு மேல் சரத் பவாருடன், அஜித் பவார் ஆலோசனை நடத்தி இருந்தார். இருப்பினும் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்னர் இரண்டு தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுவது மகராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாடீல் தலைமையில் ஏறத்தாழ 35 நிமிடங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணியில் சரத் பவாரை இணையுமாறு, அஜித் பவார் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அஜித் பவாரின் தீர்மானத்தை சரத் பவார் நிராகரித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையப்போவதில்லை என சரத் பவார் தெரிவித்து உள்ள நிலையில், சந்திப்பு குறித்து அறிந்த பல்வேறு தலைவர்களும் அது குறித்து பேச மறுப்புதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த சந்திப்புக்கு பின்னர் மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு திடீர் திருப்பம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி: சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படங்களை மாற்றிய பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.