ETV Bharat / bharat

மின்னல் தாக்கி 26 பேர் பலி... பீகாரில் பேரிடர் அவசரநிலை?

author img

By

Published : Jul 5, 2023, 5:20 PM IST

பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடி மின்னல் தாக்கி 26 பேர் உயிருழந்து உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து உள்ளது.

Bihar
Bihar

பாட்னா : பீகாரில் இடி மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் பருவமழை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் இடி மின்னல் தாக்கி 26 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரோடாஸ் மாவட்டத்தில் மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது, தீடீரென் மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் பக்சார் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜென்னபாத் சுற்றுவட்டார பகுதியில் அடுத்தடுத்து மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மின்னல் தாக்கி உடல் கருகிய ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பன்காவில் மின்னல் மற்றும் கொட்டித் தீர்த்த கனமழையால் கால்நடைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மின்னல் தாக்கி கீழே விழுந்த கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில், அவை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜமுயி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 11 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை திருப்பி கொண்டு வரச் சென்ற நிலையில், மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த பெண்கள் உள்ளிட்டோர் மீது மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவுரங்கபாத், கயா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நடப்பாண்டில் கணக்கிப்பட்ட அளவை காட்டிலும் பருவமழை மூன்கூட்டிய 31 சதவீதம் வரை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ள பேரிடம் மேலாண்மை துறை அதிகாரிகள், மக்கள் வெளியே செல்லும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர், சின்னம் யாருக்கு? இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.