ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற புதிய நீதிபதி ரமணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள்

author img

By

Published : Apr 24, 2021, 10:26 PM IST

நேற்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன். நான் விட்டுச் செல்லும் பணியை புதிய தலைமை நீதிபதி ரமணா சிறப்புடன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

என்.வி. ரமணா
என்.வி. ரமணா

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்ஏ போப்டே ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி ரமணா அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்வி ரமணா பதவி ஏற்றுக்கொண்டார்.

தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம்
தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தலைமை நீதிபதிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, என்.வி ரமணா தலைமை நீதிபதியாக பதவியில் தொடர்வார்.

குடியரசுத் தலைவர் மாளிகை
குடியரசுத் தலைவர் மாளிகை

நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பு

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது, இது இரண்டாவது முறை. முன்னதாக, 1966 முதல் 1967 வரை, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்பா ராவ் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தீர்ப்புகள்
வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தீர்ப்புகள்

ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த என்.வி.ரமணா, கடந்த 2000ஆம் ஆண்டில் ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். பின்னர், 2013இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

முன்னதாக, நேற்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டேவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், என்னால் முடிந்த அளவு சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன் என்றார். நான் விட்டுச் செல்லும் பணியை புதிய தலைமை நீதிபதி ரமணா சிறப்புடன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி எஸ்.ஏ பாப்டே
நீதிபதி எஸ்.ஏ போப்டே


புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட என்.வி ரமணாவின் சில முக்கிய தீர்ப்புகளைப் பார்ப்போம்.

என்.வி ரமணாவின் சில முக்கிய தீர்ப்பு
என்.வி ரமணாவின் சில முக்கிய தீர்ப்பு

2020ஆம் ஆண்டில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகத் தலைவராக நீதிபதி என்.வி. ரமணா, பெண்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஒரு இயக்கத்தை தொடங்கினார், இது பெண்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறித்துத் தெரிவிக்கும். 'சட்ட விழிப்புணர்வு மூலம் பெண்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் NALSAவுக்கும் தேசிய பெண்கள் ஆணையத்திற்கும் இடையே ஒத்துழைப்பு இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி


எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைவாக தீர்ப்பது

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பட்டியலிட வேண்டும் என்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு 2019 செப்டம்பர் 17 அன்று ஒரு உத்தரவை வெளியிட்டது. நீதிமன்ற உத்தரவுகளின்படி இதுவரை பட்டியலிடப்படாத இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் பட்டியலிட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

என்.வி. ரமணாவின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள்
என்.வி. ரமணாவின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள்

பெண்களின் வீட்டு வேலைகளுக்கு மதிப்பு

2021 ஜனவரியில், நீதிபதி என்.வி.ரமணா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பெண்கள் வீட்டின் செய்யும் வீட்டு வேலைகள் அவரது கணவரின் அலுவலக வேலைகளை விட குறைவானது அல்ல என்று தீர்ப்பளித்திருந்தது. 2001 லதா வாத்வா வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட யோசனையை வலியுறுத்திய நீதிபதி என்.வி.ரமணா, இல்லத்தரசிகள் அவர்கள் வீட்டில் செய்த சேவைகளின் அடிப்படையில் பணம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம் வழங்குவது

என்.வி. ரமணாவின் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தீர்ப்புகள்
என்.வி. ரமணாவின் வரலாற்று சிறப்புமிக்க முக்கிய தீர்ப்புகள்

2018ஆம் ஆண்டில், நீதிபதி என்.வி. ரமணா, பெண் அலுவலர்களுக்கு பாதுகாப்பு துறைகளில் நிரந்தர ஆணையம் வழங்கப்படாதது குறித்து மத்திய அரசை குறைகூறினார். இது தொடர்பாக ஒரு பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டதுடன், குறுகியகால சேவை ஆணையம் (SSC) குறித்து மத்திய அரசிடமிருந்து பதிலைக் கோரியது.

முகமது அன்வர் எதிர் டெல்லியின் என்.சி.டி மாநிலம், 2020

நீதிபதி என்.வி.ரமணா, எஸ்.ஏ. நசீர் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இபிகோ பிரிவு 84இன் படி மனநோயைக் காரணம் காட்டி விதிவிலக்கு கோருவதற்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர் அவர் / அவள் உண்மையில் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிருபிக்க வேண்டும் என்று கூறியது.

370 பிரிவு குறித்து பெரிய அமர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சய் கிஷன் கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோரின் முன்னிலையில் வந்த டாக்டர் ஷா ஃபேசல் & ஆர்ஸ் எதிர் இந்திய அரசு தொடர்பான வழக்கில் அரசியலமைப்பின் 370ஆவது பிரிவின் கீழ் ஜம்மு கஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து குடியரசு மற்றவர்கள் உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யும் மனுக்களை பெரிய அமர்விற்கு அனுப்ப வேண்டிய அவசியத்தை மறுத்தது.

2012 டெல்லி கூட்டு வன்புணர்வு குற்றவாளியின் கருணை மனுவை தள்ளுபடி செய்து மரண தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்தது

பவன் குமார் குப்தா எதிர் டெல்லி அரசு 2012 டெல்லி கூட்டு வன்புணர்வு வழக்கை விசாரித்த, ​​நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோஹிண்டன் ஃபாலி நரிமன், ஆர் பானுமதி, அசோக் பூஷண், மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் குற்றவாளிகளின் தூக்கிலிட தடை கோரும் மனுவையும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததற்கு எதிரான இறுதி மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் 20 அன்று அதிகாலை 5:30 மணியளவில் நான்கு குற்றவாளிகளும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

காஷ்மீர் ஊரடங்கு: இணையத்தடை காலவரையறையின்றி இருக்க கூடாது, மதிப்பாய்வுகள் மேற்கொள்ள வேண்டும்

அனுராதா பேசின் எதிர் இந்திய அரசு தொடர்பான வழக்கை விசாரித்த என்.வி.ரமணா, சூர்யா காந்த் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அரசியலமைப்பின் 19(1)(ஜி) பிரிவு கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரதிற்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகக் கூறினர். இது தொடர்பாக, இணையத்தை நிறுத்த முடியாது, அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும். நியாயமான கருத்து அல்லது குறைகளை வெளிப்படுத்துவதை அடக்குவதற்காக அல்லது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தும்போது குற்றவியல் சட்டம் 144ஆவது பிரிவின் கீழ் தடை விதிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.

இரண்டு பங்குதாரர்கள் மட்டுமே கொண்ட ஒரு கூட்டு நிறுவனத்தை கலைக்கும் செயல்முறை

என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் ஒரு கோரம், இரண்டு பங்குதாரர்கள் மட்டுமே இருக்கும் ஒரு நிறுவனத்தில், ஒருவர் ஓய்வு பெற ஒப்புக் கொண்டால், அந்த நிறுவனம் தானாகவே கலைக்கப்படுவதாகும்.

சொத்து பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நில உரிமையாளர்- குத்தகைதாரர் தகராறுகள் நடுநிலையானவை

உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோரின் முன்வந்த நில உரிமையாளர்-குத்தகைதாரர் தொடர்பான வழக்கில், வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களால் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மன்றத்தின் கீழ் வருபவை தவிர சொத்து பரிமாற்றச் சட்டம் மூலம் நிர்வகிக்கப்படும் நில உரிமையாளர்-குத்தகைதாரர் தகராறுகள், அவை சொத்துகள் தொடர்பாக இல்லாமல் ஆனால் சொத்தின் மீதுள்ள உரிமைகளிலிருந்து எழும் ஆளுமைக்கு உட்பட்ட உரிமைகள் தொடர்பானவை என்பதால் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டியவை என்று தீர்ப்பளித்தது.

மத்திய பொது தகவல் அலுவலர் (எதிர்) சுபாஷ் சந்திர அகர்வால், 2019

ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா, டி.ஒய் சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோரின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தலைமை நீதிபதி பதவி, தகவல் அறியும் உரிமையின் கீழ் வருகிறது என்று கூறியது.

ரோஜர் மேத்யூ (எதிர்) சவுத் இந்தியா வங்கி லிமிடெட், 2019

ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா, டி.ஒய் சந்திரசூட், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, நிதிச் சட்டம், 2017இன் பிரிவு 184, அதிகப்படியான சட்ட செயல்பாடுகளால் பாதிக்கப்படுவதில்லை என்று கருதி அதன் செல்லும் என்று உறுதிசெய்தது.

ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட் (எதிர்) ஹரியானா, 2017

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 7: 2 பெரும்பான்மையின்படி, பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாநிலங்கள் விதித்த நுழைவு வரி சரியே என்று உறுதி செய்தது.

நபாம் ரெபியா, மற்றும் பாமாங் பெலிக்ஸ் (எதிர்) துணை சபாநாயகர், 2016

இந்திய அரசியலமைப்பின் 174வது பிரிவை அமல்படுத்தும் அதேசமயம் 163வது பிரிவை மீறியதற்காக, அருணாச்சல் ஆளுநரின் உத்தரவை ஜெகதீஷ் சிங் கெஹர், தீபக் மிஸ்ரா, மதன் பி.லோகூர், பினாக்கி சந்திர கோஸ் மற்றும் என்.வி.ரமணா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.

ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நல சங்கம் (எதிர்) தமிழ்நாடு அரசு, 2016

கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது ஆகமங்களின்படி செய்யப்பட்டாலும், அவர்களை சரியான முறையில் அடையாளம் காணப்படுவதற்கு, அரசியலமைப்பு ஆணைகள் மற்றும் கொள்கைகளுடனான இணக்கத்திற்கும் உள்பட்டவை என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது.

இயக்கங்கள்

பெண்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து: 2020ஆம் ஆண்டில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (நல்சா) நிர்வாகத் தலைவராக நீதிபதி என்.வி.ரமணா, ஒரு இயக்கத்தை தொடங்கினார், இது பெண்களுக்கு அவர்களின் சட்ட உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறித்துத் தெரிவிக்கும். நல்சாவுக்கும் தேசிய பெண்கள் ஆணையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு 'சட்ட விழிப்புணர்வு மூலம் பெண்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் இருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.