ETV Bharat / bharat

பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள பெண்

author img

By

Published : Feb 6, 2023, 4:11 PM IST

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள பெண்
பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள பெண்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கேரள மாநிலத்தை சேர்ந்த மானசி சதீபைனு பிப் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, அதில் பயணிக்க கேரள மாநிலத்தை சேர்ந்த மானசி சதீபைனு என்பவர் வந்துள்ளார். இந்த விமானம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் போர்டிங் கேட் எண்.06 அமர்ந்திருந்த மானசி அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார். அந்த நேரத்தில் அவர், கொல்கத்தா விமானம் விரைவாக செல்லாவிட்டால், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து போர்டிங் கேட் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி கூச்சலிட தொடங்கினார். இதனால் சக பயணிகளிடையே பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மானசியை பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவரை கைது செய்த போலீசார் இன்று (பிப். 6) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றம் இவரை 11 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கர்நாடகா சென்றார் பிரதமர் மோடி - ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.