ETV Bharat / bharat

Niti Ayog Health Index: இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு

author img

By

Published : Dec 27, 2021, 7:26 PM IST

Niti Ayog Health Index: இந்தியாவில் மாநில அளவிலான சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

niti aayog state health index  Kerala emerges best healthy state  Healthy States, Progressive India Report 2019-2020  இரண்டாவது இடத்தில் தமிழகம்  சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியல்  சுகாதாரத்துறைக்கான பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம்  நாட்டிலேயே சுகாதாரத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம்
இரண்டாவது இடத்தில் தமிழகம்

Niti Ayog Health Index: நிதி ஆயோக் வெளியிட்ட சிறந்த சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அரசு இன்று (டிசம்பர் 27) வெளியிட்டது.

அதில் நாட்டிலேயே சுகாதாரத்துறையில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், தெலங்கானா மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனைபடைத்துள்ளது.

கரோனா தீவிரமடைந்தபோது, சிறப்பாகச் செயல்பட்டு, கடும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்ட சுகாதாரத்துறைக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் இடம் பிடித்துள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்பட்டியலில், சிறப்பாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறைகளுக்கென முன்னணி இடங்களும், மோசமாக செயல்பட்ட மாநிலங்களுக்கு கடைசி இடங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Dengue Fever: டெங்குவால் பள்ளி மாணவர் உயிரிழப்பு - மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.