ETV Bharat / bharat

அந்தரங்க உறுப்பை தாக்கினால் கொலை முயற்சியா? கர்நாடக உயர் நீதிமன்றம் திடுக் தீர்ப்பு!

author img

By

Published : Jun 26, 2023, 7:22 PM IST

Updated : Jun 27, 2023, 11:12 AM IST

அந்தரங்க உறுப்பினை பிடித்து கசக்கிய ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அந்தரங்க உறுப்பில் சீண்டுவது கொலை முயற்சியாகாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Karnataka High Court
Karnataka High Court

பெங்களூரு : சண்டையின் போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியைச் சேர்ந்தவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஓம்காரப்பா. கடந்த 2010ஆம் ஆண்டு நரசிம்ம சுவாமி கோவில் திருவிழாவை ஓம்காரப்பா தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிக் கொண்டு இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த பரமேஷ்வரப்பா அவருடன் சண்டையிட்டு உள்ளார்.

மேலும் சண்டையின் போது, ஓம்காரப்பாவின் ஆண் உறுப்பை பிடித்து பரமேஷ்வரப்பா கடுமையாகப் பிடித்து கசக்கி உள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓம்காரப்பா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் பரமேஷ்வரப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து விசாரணை சிக்மகளூரு மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பரமேஷ்வரப்பாவை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. மேலும் கொலை முயற்சி உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரமேஷ்வரப்பாவுக்கு 8 ஆண்டுகள் 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து கடந்த 2012ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2012ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பரமேஷ்வரப்பா மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் நிறைவு பெற்று நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.

சண்டையின் போது அடுத்தவரின் ஆண் உறுப்பில் கசக்குவது கொலை முயற்சியாகாது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர் நோக்கத்துடன் செய்வது இல்லை என்பதால் அது திட்டமிட்ட செயல் என கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நோக்கத்துடன் கொலை செய்ய முயற்சித்தார் என்று கூற முடியாது என்பதால் அப்படி ஏற்படும் காயத்தை இந்திய தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் அந்தரங்க உறுப்புகளை தாக்குவதன் மூலம் ஏற்படும் காயம் என கூறலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், விசாரணை நீதிமன்றத்தின் கொலை முயற்சிக்காக 7 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனையை மூன்று ஆண்டுகளாக குறைத்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : Himachal floods: சண்டிகர் - மனாலி நெடுஞ்சாலை மூடல்.. 12 கி.மீ. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

Last Updated :Jun 27, 2023, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.