ETV Bharat / bharat

காஷ்மீரில் டிஜிபி கொலை... பயங்கரவாத அமைப்பு காரணமா..?

author img

By

Published : Oct 4, 2022, 10:21 AM IST

காஷ்மீரின் உதய்வாலா அருகே சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் கே லோகியா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், பிஏஎஃப்எஃப் பயங்கரவாத அமைப்பு கொலைக்கு பெறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

Etv Bharatஜம்மு- காஷ்மீர் டிஜிபி மர்ம மரணம் - கொலையா என போலீசார் சந்தேகம்
Etv Bharatஜம்மு- காஷ்மீர் டிஜிபி மர்ம மரணம் - கொலையா என போலீசார் சந்தேகம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதய்வாலாவில் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் கே லோகியா நேற்று(அக்-3) அவரது வீட்டில் மர்மமான முறையில் கழுத்தறுப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறிப்பாக டிஜிபி வீட்டில் வேலை செய்தவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமந்த் கே லோகியாவின் கழுத்து அறுப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அவரது உடலிலும் தீக்காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட தகவலில், சாஸ் பாட்டிலால் கழுத்தை அறுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் உடல்கூராய்விற்கு பின்பே முழு தகவல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிஏஎஃப்எஃப் (People's Anti-Fascist Force) பயங்கரவாத அமைப்பு கொலைக்கு பெறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஊழலுக்கு எதிராக மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கையை வெட்டிக்கொண்ட துறவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.