ETV Bharat / bharat

கேரள ரயில் தாக்குதலில் தீவிரவாத தலையீடா? தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டமா? போலீஸ் கையில் சிக்கிய ரெட் டைரி!

author img

By

Published : Apr 3, 2023, 2:08 PM IST

கேரளாவில் ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தடுத்து கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

கோழிகோடு : ஆலப்புழா - கண்ணூர் எக்சிக்யூடிவ் விரைவு ரயில் நேற்று (ஏப் 02) இரவு எலதூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த போது, ரயிலில் பயணித்த மர்ம நபர், திடீரென தன் பையில் இருந்த பெட்ரோலை எடுத்து ரயிலை எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ரயில் பயணி மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

நொடிப் பொழுதில் தீ ரயிலில் பரவிய நிலையில், அதே ரயிலில் பயணித்த பெண், இளைஞர், சிறுமி உள்ளிட்டோர் உயிரை காத்துக் கொள்ள ரயிலில் இருந்து வெளியே குதித்தனர். இந்த திடீர் தாக்குதலில் 9 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பயணிகள் கொடுத்த தகவலின் படி ரயிலில் இருந்து வெளியே குதித்த 3 பேரை போலீசார் சடலமாக மீட்டனர். அவர்கள் மட்டனூரைச் சேர்ந்த ரஹ்மத், மற்றும் அவரது தங்கையின் 2 வயது மகள் சஹாரா, மற்றும் நவ்பிக் ஆகியோர் என போலீசார் அடையாளம் கண்டனர். மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்திய நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகி உள்ளன. தாக்குதல் நடத்திய நபர் 25 வயது மதிக்கத்தக்கவர் என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். அந்த இளைஞர் லிப்ட் கேட்டு இரு சக்கர வாகனத்தில் பயணித்தது, சாலையை கடக்க முயன்ற உள்ளிட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

மேலும், ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த மர்ம நபரின் உடைமை எனக் கூறப்படும், செல்போன், கால் லிட்டர் எரிபொருள் பாட்டில், சிவப்பு நிறத்திலான டைரி, ஈயர் போன், பேனா, ஷார்ப்பனர், திண்பண்டங்கள், பர்ஸ், கண்ணாடிக் குவளைகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்ட சிவப்பு நிற டைரி மற்றும் பாக்கெட் டைரியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததாகவும், மேலும் கோவளம், கன்னியாகுமரி, குளச்சல், திருவனந்தபுரத்தில் உள்ள சீராயின்கிழ் உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டைரிகளில் குறிப்பிடப்பட்டு இருந்த ஊர்களில் தாக்குதல் நடத்த மர்ம நபர் திட்டமிட்டு இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளதாக போலீசார் கூறினர். பல்வேறு சந்தேகங்கள் இந்த வழக்கில் நிலவும் நிலையில், பயங்கரவாத தடுப்பு படை அதிகாரிகள் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டம் இருக்குமோ என்ற அச்சம் நிலவும் நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வும் இந்த வழக்கை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறுபுறம் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் 26 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது.

அந்த வழக்கில் இந்த சம்பவத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதாக என கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் இன்னும் கைதாக நிலையில், அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்குள் அவரை போலீசா கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க : மறக்குமா நெஞ்சம்! - 2011 உலக கோப்பை குறித்து டோனி உதிர்த்த வார்த்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.