ETV Bharat / bharat

சர்வதேச தேயிலை தினம்: சூரத்தில் சூடான டீ எவ்வளவு தெரியுமா?

author img

By

Published : May 23, 2022, 1:48 PM IST

இந்தியாவிலேயே அதிக விலையுயர்ந்த தேயிலைத் தூளான சூரத் தேயிலைத் தூள் மே 21 அன்று சர்வதேச தேயிலை தினத்தையொட்டி ஒரு கிலோ ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்டது.

சர்வதேச தேயிலை தினம்- 2022;  சூரத்தில் சூடான  டீ எவ்வளவு தெரியுமா?
சர்வதேச தேயிலை தினம்- 2022; சூரத்தில் சூடான டீ எவ்வளவு தெரியுமா?

சூரத் (குஜராத்): சர்வதேச தேயிலை தினம் கடந்த மே 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலேயே அதிக விலைக்கு விற்பனையாகும் தேயிலைத் தூள் குஜராத்தின் சூரத் நகரில் விற்கப்படுகிறது. இதன் விலை அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கும். இருப்பினும் இந்த நகரில் உள்ள மக்கள் இந்த விலை உயர்ந்த தேயிலை தூளை தான் மிகவும் விரும்புகிறார்கள்.

சூரத்தில் ஒரு கிலோ டீத்தூள் ரூ.5 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இந்த பகுதிகளில் நாம் ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்றால் 250 ரூபாயை செலவழிக்க தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இங்கு சுற்று வட்டாரங்களில் ஒரு கப் டீயை அதிக விலைக்கு வாங்கி அருந்துவுதையே அப்பகுதி மக்களும் விரும்புகின்றனர். இங்கு பலவகையான தேயிலைத் தூள்கள் விற்கப்படுகின்றன.

லெமன் டீ, க்ரீன் டீ கேள்விப்பட்டிருப்போம் ஒயிட் டீ கேள்வி பட்டிருக்கிறீர்களா?. சூரத்தில் ஒயிட் டீ மிகவும் பிரபலமான டீ வகையாகும். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூரத்தின் பிப்லோட் பகுதியில் கிடைக்கும் ஒயிட் டீ, மற்ற தேநீரைப் போல் இல்லை. இந்த டீ தனித்துவமான சிறப்பை பெற்றுள்ளது. எனவே மற்ற பகுதிகளில் ரூ.10-க்கு டீ வாங்கும் போது சூரத் மக்கள் ரூ.250-க்கு டீ வாங்கி அருந்துகிறார்கள்.

மேலும் சூரத் டீத்தூள் பல மருத்துவ பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. இந்த டீத்தூள் மூலம் உடல் பருமன் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.5 லட்சத்திற்கு டீத்தூள் விற்கப்படுவதால் இது பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டீ பிரியர்களுக்கு புதிய ரக டீயை ட்ரை செய்ய வேண்டுமானால் சூரத் செல்லலாம்.

இதையும் படிங்க: ஒட்டகப் பாலில் டீ வேணுமா? கோவைக்கு வாங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.