ETV Bharat / bharat

உக்ரைன் போர்: சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி வாக்களிப்பு

author img

By

Published : Mar 17, 2022, 8:39 PM IST

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி நேற்று ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

நீதிபதி தல்வீர் பண்டாரி
நீதிபதி தல்வீர் பண்டாரி

வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சர்வதேச நீதிமன்றமானது, ரஷ்ய தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்தான வாக்கெடுப்பில், இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி நேற்று மார்ச் 16ஆம் தேதி, ரஷ்யாவுக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) வாக்களித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை 13 நீதிபதிகள் ஆதரித்த நிலையில், ரஷ்யாவின் தூதர் கிரில் கெவோர்ஜியன் மற்றும் சீனா நீதிபதி க்ஸீ ஹான்கின் ஆகிய இருவரும் கடுமையாக எதிர்த்ததுமட்டுமல்லாமல், அந்த உத்தரவிற்கு எதிராகவும் வாக்களித்தனர்.

ரஷ்யாவுடன் இந்தியா நட்பு நாடாக உள்ளபோதும், உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா.சர்வதேச நீதிமன்றத்தில் நமது நீதிபதி எதிராக வாக்களித்துள்ளது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதற்கிடையில், உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் எட்வர்ட் பிரைஸ், "சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில், தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. குறிப்பாக, உக்ரைனில் பிப். 24அன்று தொடங்கிய ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று தலைமை நீதிபதி ஜோன் டோனோகு சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

மேலும், இதுதொடர்பாக பேசிய எட்வர்ட் பிரைஸ் "நாங்கள் நீதிமன்ற உத்தரவை வரவேற்று உக்ரைனிலுள்ள ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும், அங்கு தடையற்ற மனிதாபிமான அணுகலை நிறுவவும் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 12-14 வயதினருக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம் - முதல் நாளிலில் 2.6 லட்சம் பயனாளிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.