ETV Bharat / bharat

இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் - அடுத்த ஆண்டு பாரதிய விண்வெளி மைய பணி துவக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 3:07 PM IST

2028ஆம் ஆண்டு இந்தியா தனக்கென தனி விண்வெளி மையத்தை கொண்டு இருக்கும் என்றும் அதற்கான சோதனை அடுத்த ஆண்டு முதல் தொடங்க உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

பரிதாபாத் : அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், எல்லை காரியங்களும் நன்றாக சென்றால், 2028ஆம் ஆண்டு இந்தியா தனக்கென தனி விண்வெளி மையத்தை கொண்டு இருக்கும்.

2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தின் தொகுதியை உருவாக்குவது, பரிசோதனை மேற்கொள்வது மற்றும் விண்ணில் செலுத்துவது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக சோம்நாத் தெரிவித்தார். 2035ஆம் ஆண்டுக்கு விண்வெளி மையத்திற்கான அனைத்து பணிகளையும் திட்டமிட்டபடி செய்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் கூறினார்.

குறிப்பாக 2035ஆம் ஆண்டுக்குள் பாரதிய விண்வெளி மையத்தை நிறுவ பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல் 2024ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விண்வெளி வீரர்களை தரையிறக்கும் திட்டம் குறித்து முன்னர் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி கூடத்துடன் கூடிய விண்வெளி மையத்தை நிறுவுவதை இலக்காக கொண்டு உள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சோம்நாத் குறிப்பிட்டார். முன்மொழியப்பட்டு உள்ள விண்வெளி மையத்தில் கட்டளை குழு உள்ளிட்ட பல்வேறூ தொகுதிகளுடன் கட்டமைக்க திட்டமிட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், விவசாயம் மற்றும் தொலைதூர உணர்தல் முதல் போக்குவரத்து, நீர் ஆதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வரை பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும், 2023 ஆம் ஆண்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்குவதற்கான கதவுகளை இஸ்ரோ திறந்துவிட்டதாக தற்போது நடைபெறும் அறிவியல் விழா மாணவர்களுக்கு ஒரு முக்கியமான கற்றல் வாய்ப்பாக அமையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : பொதுக் குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு மீண்டும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.