ETV Bharat / bharat

இந்தியா ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்தது - பிரகலாத் ஜோஷி

author img

By

Published : Dec 12, 2022, 5:59 PM IST

இந்தியா ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்ததாக மத்திய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

இந்தியா ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்தது
இந்தியா ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்தது

டெல்லி: இதுகுறித்து மாநிலங்களையில் இன்று (டிசம்பர் 12) மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியா ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் ரூ.2.3 லட்சம் கோடி மதிப்பிலான 131.92 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இந்த இறக்குமதி 2020 நிதியாண்டில் 215.25 மெட்ரிக் டன், 248.54 மெட்ரிக் டன்னாகவும், 2019 நிதியாண்டில் 235.35 மெட்ரிக் டன்னாகவும், 2018 நிதியாண்டில் 208.25 மெட்ரிக் டன்னாகவும் இருந்தது.

நடப்பு நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு ரூ. 19,324.79ஆக இருந்தது. இதே நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு ரூ.2,662.97ஆக இருந்தது.

நாடு முழுவதும் நிலக்கரி உற்பத்தி கடந்த 2020-21ஆண்டில் 716.083 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2021-22 ஆண்டில் 778.19 மில்லியன் டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் (நவம்பர் 2022 வரை) 524.2 மில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 448.1 மில்லியன் டன்னாக இருந்தது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு..? - எம்.பி. மோடி வைத்த கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.