ETV Bharat / bharat

நுரையீரலில் சிக்கிய ஊசியை அகற்றி ஹரியானா மருத்துவர்கள் சாதனை

author img

By

Published : Jul 30, 2023, 10:21 AM IST

ஹரியானாவின் ரோஹ்தக்கில் ஒருவருக்கு நுரையீரலில் பதிந்திருந்த 2 அங்குல ஊசியை நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

நுரையீரலில் சிக்கிய ஊசி
நுரையீரலில் சிக்கிய ஊசி

ரோஹ்தக்: ஹரியானாவின் ரோஹ்தக்கில் ஒருவருக்கு நுரையீரலில் பதிந்திருந்த 2 அங்குல ஊசியை நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நுரையீரல் மற்றும் கிரிட்டிகல் கேர் மருத்துவத் துறையின் மருத்துவர்கள் அகற்றினர். ஹரியானா மாநிலம், ரோஹ்தக் மாவட்டத்தின் பாரா பஜார் பகுதியைச் சேர்ந்த 55 வயதான நபருக்கு தனியார் மருத்துவமனையில் பல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

பரிசோதனையின் போது 2 அங்குல ஊசி அவரது வாயினுள் சென்றது. இதனால் அருகில் இருந்து அவசரமாக (PGIMS - Pandit Bhagwat Dayal Sharma Post Graduate Institute of Medical Sciences) பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டார். இங்கு அவருக்கு எக்ஸ்ரே (X-ray) எடுக்கப்பட்டது. ஆனால் இந்த எக்ஸ்ரேயில் உடலில் ஊசி இருப்பது தென்படவில்லை. அதன் பிறகு அவருக்கு சிடி ஸ்கேன் (CT Scan) செய்து பார்க்கப்பட்டது.

ஆனால், அப்போதும் ஸ்கேனில் அவர் உடலில் சென்ற ஊசி தென்படவில்லை. அடுத்ததாக இரண்டாவது முறையாக சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது நோயாளி சுவாசப் பாதையின் முடிவில் இடது நுரையீரலில் ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த ஊசி நோயாளிக்கு இடது நுரையீரலின் நான்காவது மடலில் இருந்தது. ஆகையினால் அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை (major operation) செய்ய வேண்டிய நிலையில் இருந்தது.

அதனை அடுத்து (Department of Pulmonary and Critical Care Medicine) நுரையீரல் மற்றும் கிரிட்டிகல் கேர் மருத்துவத் துறையின் இணைப் பேராசிரியரான மருத்துவர் பவன் தலைமையிலான மருத்துவர்கள் குழு, இந்த அரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. சுமார் நான்கு மணிநேர அறுவை சிகிச்சைப் பிறகு மருத்துவர்கள் அந்த நபரின் நுரையீரலில் சிக்கிய ஊசியை அகற்றி அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினர்.

இதுகுறித்து பேசிய நுரையீரல் மற்றும் கிரிட்டிகல் கேர் மருத்துவத்துறையின் இணைப் பேராசிரியரான டாக்டர் பவன், “நோயாளிக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது, அவரது உடலில் இருந்த ஊசி தெரியவில்லை. அதன் பிறகு, CT ஸ்கேன் நடத்தப்பட்டது. ஆனால், அப்போதும் ஊசி இருப்பது தெரியவில்லை. இரண்டாவதாக மீண்டும் CT ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது தான் ஊசி சரியாக இடது நுரையீரலில் சிக்கி இருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த ஊசியானது நோயாளிக்கு இடது நுரையீரலின் நான்காவது மடலில் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ப்ரோன்கோஸ்கோபி எனப்படும் நுரையீரல் ஊடுசோதிப்பு கருவி மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரலில் இருந்த ஊசி எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி கைது... 1997 கொலை வழக்கில் கைது.. 25 ஆண்டுகள் தலைமறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.