ETV Bharat / bharat

Manipur video: 4 பேர் கைது - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அரசு பரிசீலனை

author img

By

Published : Jul 21, 2023, 8:53 AM IST

Updated : Jul 21, 2023, 9:47 AM IST

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் வீடியோ, தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Manipur video:  இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளான வீடியோ - 4 பேர் கைது!
Manipur video: இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளான வீடியோ - 4 பேர் கைது!

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ, நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் காவல் துறை 4 பேரை கைது செய்து உள்ளது.

கடத்தல் மற்றும் கூட்டுப் பலாத்காரம் என்ற கொடூரமான குற்றத்தில் மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே, ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், மொத்தம் 04 (நான்கு) நபர்கள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று மணிப்பூர் காவல்துறை ட்வீட் செய்து உள்ளது.

  • Manipur Viral Video Case | Three more main accused of the heinous crime of abduction and gang rape under Nongpok Sekmai PS, Thoubal District have been arrested today. So a total of four persons have been arrested till now. The State Police is making all-out efforts to arrest the…

    — ANI (@ANI) July 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், மாநில காவல்துறை மற்றும் மத்தியப் படைகளால் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் நாகாஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மணிப்பூர் போலீசார் சோதனை நடத்தி மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்று மாநில காவல்துறை ட்வீட் பதிவில் தெரிவித்து உள்ளது.

"நாகாஸ் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் சோதனை: மாநில காவல்துறை மற்றும் மத்தியப் படைகள் பள்ளத்தாக்கு மற்றும் மலை மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இம்பாலில் கிழக்குப் பகுதியில் ஐந்து வெடிமருந்துகளுடன் இரண்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக, அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற விதிமீறல்களை தடுக்கும் வகையில், மொத்தம் 129 நாகாக்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு இருந்த நிலையில், , விதிமீறல்கள் தொடர்பாக 657 பேர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

"தேசிய நெடுஞ்சாலௌ-37 இல் 464 (நானூற்று அறுபத்தெட்டு) வாகனங்களும், NH-2 இல் 138 (நூற்று முப்பத்தெட்டு) வாகனங்களும் அத்தியாவசியப் பொருட்களுடன் இயங்குவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிப்பு அபாயம் உள்ள அனைத்து இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும் வாகனங்களின் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக, முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு கான்வாய் அமைக்கப்பட்டு உள்ளதாக" என்று மணிப்பூர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பெண்களை நிர்வாணப்படுத்தி, அணிவகுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் வைரல் வீடியோவுக்கு, மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளதோடு, இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின்படி முன்மாதிரியான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உத்தரவிட்டு உள்ளார்.

பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டி உள்ள இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் வீடியோவில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தனது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங் கூறி உள்ளார்.

மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர்களை அட்டவணைப் பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்க முன்மொழியப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மே 3ஆம் தேதி, மணிப்பூரின் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) நடத்திய பேரணிக்குப் பிறகு மணிப்பூரில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Manipur Video: இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்பி அதிர்ச்சி தகவல்!

Last Updated :Jul 21, 2023, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.