ETV Bharat / bharat

டெல்லியில் அமித் ஷா, அமரீந்தர் சிங் சந்திப்பு!

author img

By

Published : Sep 29, 2021, 6:50 PM IST

Updated : Sep 29, 2021, 7:47 PM IST

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கேப்டன் அமரீந்தர் சிங் பேசினார்.

Captain Amarinder Singh
Captain Amarinder Singh

டெல்லி : பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக கேப்டன் அமரீந்தர் சிங் இருந்தார். இவர் சில வாரங்களுக்கு கட்சி மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய போவதாக ஊகங்கள் வெளியாகின. இதை கேப்டன் அமரீந்தர் சிங் மறுத்தார். தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க போவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில் கேப்டன் அமரீந்தர் சிங் டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் புதன்கிழமை (செப்.29) மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்கு சென்றார்.

அங்கு அவர் அமித் ஷாவுடன் உரையாடினார். இது பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியில் புதிதாக இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இந்நிலையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கட்சி தலைவர் பொறுப்பை வழங்கியது. இது அமரீந்தர் சிங்குக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது.

இதற்கிடையில் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பொறுப்பை துறந்தார், தொடர்ந்து மௌமான இருந்துவந்தார். புதிய முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையிலும் அமரீந்தர் சிங் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்துவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், “பஞ்சாப் மாநிலம் மற்றும் மக்களின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கேப்டன் அமரீந்தர் சிங் ட்விட்டரில், “நான் ஏற்கனவே கூறினேன், அவர் ஸ்திரமான மனிதர் அல்ல. அவரால் பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தை நிர்வகிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவையும் அவர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'தனிப்பட்ட பகை இல்லை, சேவை செய்ய விரும்புகிறேன்'- நவ்ஜோத் சிங் சித்து!

Last Updated : Sep 29, 2021, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.