ETV Bharat / bharat

Jagadish Shettar: காங்கிரஸில் இணைந்த மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.. பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!

author img

By

Published : Apr 17, 2023, 10:01 AM IST

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது கர்நாடக பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இவை தவிர ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்குகிறது. கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் கட்சியுன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் தேர்தல் களம் சற்று சூடுபிடித்துள்ளது. இரு கட்சிகளும் ஒரு சில இடங்களை தவிர பிற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சனிக்கிழமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக பெரும்பாலானோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் . இதனால் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இருந்து விலகினார்.

ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்த நிலையில், ஹுப்ளியில் தனது ஆதரவாளர்களுடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்த அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், "முழு மனதுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். டி.கே.சிவக்குமார், சித்தராமையா, ரந்தீப் சுர்ஜேவாலா, எம்பி பாட்டீல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அழைத்தபோது எவ்வித யோசனையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டேன்" என்று கூறினார்.

  • I am wholeheartedly joining Congress. I was contacted by Congress leaders including DK Shivakumar, Siddaramaiah, Randeep Surjewala and MB Patil. When they invited me, I came without any second thought: Jagadish Shettar after joining Congress pic.twitter.com/A20uhPRVUH

    — ANI (@ANI) April 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது நிலக்கரி ஊழல் புகார் எழுந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் சதானந்த கவுடா முதல்ராக பதவியேற்று அவரும் நீக்கப்பட்டர். அதன் பின்னர், அம்மாநிலத்தின் 15-வது முதலமைச்சராக ஜூலை 12 2012 முதல் மே 12 2023 வரை முதல்வர் பதவியில் ஜெகதீஷ் ஷெட்டர் இருந்தார். ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதால் அவர் சார்ந்த லிங்காயத் சமூகத்தின் வாக்குகள் மேலும் பிரியும் எனவும் இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: heatstroke: மகாராஷ்டிரா அரசு விழாவில் வெயில் தாக்கத்தால் 11 பேர் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.