ETV Bharat / bharat

Kiran Kumar Reddy: ஆந்திர மாஜி முதல்வர் பாஜகவில் ஐக்கியம்.. காங்கிரஸ் குறித்து கடும் விமர்சனம்!

author img

By

Published : Apr 7, 2023, 1:39 PM IST

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகியவருமான கிரண் குமார் ரெட்டி டெல்லியில் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். ஆந்திர மாநில அரசியலில் இது பாஜகவுக்கு சற்று பலத்தை கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தென் மாநிலங்களில் உள்ள தலைவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கிரண் குமார் ரெட்டி. இவர் ஒருங்கிணைந்த ஆந்திரா (ஆந்திரா, தெலங்கானா) மாநிலத்தில் 2010 முதல் 2014 வரை முதலமைச்சராக பதவி வகித்தவர். தெலங்கானா மாநிலம் தனியாக பிரிப்பதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டுள்ளார்.

ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரிதாக வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தெலங்கானாவில் சந்திரசேகரராவ் ஆகியோரின் செல்வாக்கே மேலோங்கி காணப்பட்டது. இதற்கிடையே ஆந்திராவில் YSR காங்கிரஸ் கட்சி அசுரபலமடைந்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தார்.

காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவமின்மை காரணமாக அதிருப்தியில் இருந்த கிரண்குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2014-ல் விலகினார். பின்னர் ஜெய் சமிக்யந்திரா என்ற சொந்த கட்சி தொடங்கினார். ஆனால் திடீரென 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து தன்னை மறுபடியும் கட்சியில் இணைத்துக்கொண்டார். பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆந்திர அரசியலில் பணியை செய்யவில்லை என்றாலும் அமைதியாக கட்சியில் இருந்த கிரண் குமார் ரெட்டி திடீரென கடந்த மாதம் 12-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை டெல்லி தலைமைக்கு அனுப்பியிருந்தார். அப்போது அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

தென்னிந்தியாவில் தனது பலத்தை அதிகரிக்கும் முனைப்பில் உள்ள பாஜக, ஆந்திர அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ள கிரண் குமாரை குறிவைத்தற்கான காரணம், ஆந்திரா மாநிலத்தில் ராயலசீமா எனும் பிரதான பகுதியில் பெரும் செல்வாக்கு மிக்கவர் கிரண் குமார் ரெட்டி. இவர் சித்தூர் மாவட்டத்தில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரை வைத்து ஆந்திர மாநில அரசியலில் காலூன்ற பாஜக நினைக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

  • #WATCH | "I had never imagined that I'll have to leave Congress...There is a saying- 'My king is very intelligent, he doesn't think on his own, doesn't listens to anyone's advice', "says former Congress leader Kiran Kumar Reddy on joining BJP in Delhi. pic.twitter.com/8s43F09WxK

    — ANI (@ANI) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனை நிரூபிக்கும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிரண் குமார் ரெட்டி, "1950 முதல் எங்களது குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்து வந்தோம். எனது தந்தையை சிறிய வயதிலேயே இழந்தேன். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன் என்று எப்போதும் நினைக்கவில்லை. காங்கிரஸ் தேசிய தலைமை, மாநில தலைவர்களிடம் எவ்வித ஆலோசனைகளையும் பெறாமல் எடுக்கும் நடவடிக்கையால் மக்களின் நம்பிக்கை தன்மையை இழந்துவிட்டது" என கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் அனில் ஆண்டனி: தவறான முடிவை எடுத்துவிட்டதாக தந்தை ஏ.கே.ஆண்டனி வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.