ETV Bharat / bharat

தற்காலிகத் தடைக்குப் பின் பிரிட்டனிலிருந்து பெங்களூரு வந்த முதல் விமானம்

author img

By

Published : Jan 10, 2021, 3:49 PM IST

தற்காலிக தடைக்கு பின் பிரிட்டன் நாட்டிலிருந்து முதல் விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

Karnataka
Karnataka

உலகையே உலுக்கிவரும் கோவிட்-19 பெருந்தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வந்த நிலையில், பிரிட்டன் நாட்டிலிருந்து பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த உருமாறிய வைரஸ் தீவிரத்தன்மை அதிகம் கொண்டதாகவும், குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக பிரிட்டன் நாட்டிற்கான விமான சேவைகள் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ரத்து செய்யபட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், தடைக்கு பின் பிரிட்டன் நாட்டிலிருந்து முதல் விமானம் 289 பயணிகளுடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதில் 146 ஆண்களும், 95 பெண்களும், 32 குழந்தைகளும், 16 விமான ஊழியர்களும் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவருக்கு இலவசமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதியானவர்கள் தனிமை மையங்களிலும், மற்றவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமையிலும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வங்காளிகள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - மம்தா அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.