ETV Bharat / bharat

Siachen Glacier: இந்திய ராணுவ முகாமில் தீ விபத்து... ராணுவ அதிகாரி பலி?

author img

By

Published : Jul 19, 2023, 6:27 PM IST

Updated : Jul 19, 2023, 10:51 PM IST

சியாச்சின் பனி மலை பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கூடாரங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்தில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

Army
Army

ஸ்ரீநகர் : சியாச்சின் பனி மலை பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லடாக் யூனியன் பிரதேசம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ளது இந்த சியாச்சின் பனி மலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 15 ஆயிரத்டு 632 அடி உயரத்தில் இந்த சியாச்சின் மலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடுமையான பனி, அடிக்கடி ஏற்படும் பனிப் புயல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்பது இந்திய ராணுவ வீரர்களுக்கு கடும் சவாலான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் சியாச்சின் மலை பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரி ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 6 வீரர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டு உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காயம் அடைந்த 3 வீரர்கள் சிகிச்சைக்காக சண்டிகர் அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெடிமருந்து பதுங்கு குழியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாகவும், அது மெல்ல ராணுவ கூடாரங்களில் பரவி கோர விபத்துக்கு காரணமானதாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்திய ராணுவம் தரப்பில் இது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

உயிரிழந்த அதிகாரி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. கடுமையான சூழல் உள்ளிட்ட காரணங்களால் சியாச்சின் பனி மலை பகுதியில் காவல் பணியில் ஈடுபடுவது இந்திய ராணுவத்திற்கு போராட்டமாக உள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இந்த சியாச்சின் மலை உள்ளதால் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மோசமான வானிலை, பனிப் புயல், பனிச் சறுக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் காரணமாக கடந்த 37 ஆண்டுகளில் மட்டும் இந்திய ராணுவத்தை சேர்ந்த 800 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டும் இதே போன்று தீ விபத்து சம்பவத்தில் இந்திய ராணுவத்தின் இரண்டு லெப்டினட் ரேங்க் அதிகாரிகள் மற்றும் 4 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : கர்நாடக சபாநாயகர் மீது பேப்பர் வீசி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளி! 10 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!

Last Updated :Jul 19, 2023, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.