ETV Bharat / bharat

கர்னல் மாவட்டத்தில் மீண்டும் இணைய சேவை அனுமதி

author img

By

Published : Sep 10, 2021, 5:18 PM IST

ஹரியான மாநிலம் கர்னல் மாவட்டத்தில் மீண்டும் இணைய, எஸ்எம்எஸ் சேவைகளை மாநில அரசு அனுமதித்துள்ளது.

Farmers
Farmers

ஹரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 28 தேதியிலிருந்து இணையதளம், எஸ்எம்எஸ் சேவைகள் முடக்கப்பட்டிருந்தது. அங்கு விவசாயிகள் பெருந்திரளாகக் கூடி மகாபஞ்சாயத்து போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதன்காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி 10 நாள்களுக்கும் மேலாக கர்னல் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டிருந்தது. அம்மாவட்ட ஆட்சியர் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கடுமையாக லத்தி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

அதன்பின்னர் நடைபெற்ற தாக்குதலில் விவசாயிகள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த தாக்குதலை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதன் பின்னணியில் மாவட்டத்தில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கர்னல் பகுதியில் இணைய சேவைக்கு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது. இனி வரும் நாள்களிலும் இணைய சேவையை முடக்க அரசுக்கு திட்டமில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: டான்களுக்கு சீட் இல்லை - முக்தார் அன்சாரிக்கு 'நோ' சொன்ன மாயாவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.