ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: பிப்ரவரி முதல் வார ராசிபலன்.. எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது.?

author img

By

Published : Feb 5, 2023, 6:37 AM IST

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பிப்ரவரி மாதத்தின் முதல் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையிலானவை.

வார ராசிபலன்
வார ராசிபலன்

மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இருப்பினும், உங்கள் பேச்சில் சிறிது மனக்கசப்புகள் ஏற்படலாம். பேசும் போது பேச்சில் கவனம் வேண்டும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பதற்றம் அதிகரிப்பதால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியாக, இந்த வாரம் செழிப்பாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதிக செலவு செய்யாமலிருந்தால், நீங்கள் ஒரு நல்ல தொகையை சேமிப்பு தொகையாகப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாகவே இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கும் செழிப்பாக இருக்கும், மேலும் வேகம் அதிகரிக்கும்.

ரிஷபம்: வார ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் காதலியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஏதேனும் ஒன்றை பொழுதுபோக்காக தொடருவீர்கள், அது உங்களுக்கு பயனளிக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இது நல்ல வாரமாகும். உங்களின் கடின உழைப்பும், திறமையும் உங்களுக்கு சாதகமான தீர்வுகளை வழங்கும். வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆட்டோமொபைல் துறை அல்லது கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புவார்கள்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்க முயற்சிப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் சிறு சிறு சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதரணமான வாரமாகவே இருக்கும். குடும்பத்தில் சில புதிய விஷயங்களும், நல்ல விஷயங்களும் பேசப்படும். வீட்டின் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்களிடையே அன்பான உணர்வு மேலோங்கி இருக்கும், இதன் காரணமாக நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிர்காலத்திற்கான புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

கடகம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள், அவர்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வீர்கள். இதனால் உங்கள் மேல் அன்பு அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூத்தவர்களுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும், இது வேலையில் உங்களுக்கு நன்மை பயக்கும். புதிய பணி வழங்கப்படலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை பெரிதாக்குவது தொடர்பாக சில புதிய நபர்களைச் சந்திப்பீர்கள்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் உணர்வுகளை நீங்கள் காதலிப்பவரிடம் வெளிப்படுத்த முயற்சிப்பீர்கள். வாரத் தொடக்கத்தில், நீங்கள் வெளிநாடு செல்லவோ அல்லது உங்கள் வேலை குறித்து புதிதாக முயற்சி செய்யவோ தயாராகி வருவீர்கள். உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும், ஆனால் வார நடுப்பகுதியில் உங்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் செலவுகள் குறையும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். பெரிய தவறு எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் பெயரில் வியாபாரம் செய்தால் இன்னும் அதிக வெற்றி கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் கொஞ்சம் பலவீனமானதாக இருக்கும். மனம் விட்டு பேசுவதில் சற்று சிரமப்படுவீர்கள். ஆனால் அதைக் கடக்க முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் நீங்கள் காதல் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் தாங்கள் செய்த வேலையால் பாராட்டப்படுவார்கள். வியாபாரத்தில் வெற்றியை முன்னோக்கிச் செல்வீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

துலாம்: இந்த வாரம் உங்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வாரமாக அமையும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றிக்கு வழிவகுக்கும். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தால் பலனும் பெறுவீர்கள். நண்பர்கள் உங்கள் பணியில் உதவியாக இருப்பார்கள். பொழுதுபோக்கு பயணத்திற்கான வாய்ப்புகள் அமையும். வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வேலை செய்யுமிடத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமானவர்கள் தங்கள் மனைவி வேலை செய்யும் முறையை விமர்சிப்பதற்கு பதிலாக, அவர்களுடன் சமரசம் செய்ய முயற்சியுங்கள். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவை அனுபவித்து மகிழ்வீர்கள். இருவரும் ஒன்றாக இணைந்து தனியாக நேரத்தைச் செலவிட முயற்சிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் சில இடையூறுகள் ஏற்படலாம், எனவே நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் விரைவாக குறையும். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக கொண்டு செல்வீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் செயல்களில் வெற்றி கிடைத்து மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரித்து, உங்கள் பதவி வலுப்பெறும். வேலை செய்பவர்களுக்கு பணி சிறப்பாக இருக்கும், இதன் காரணமாக வேலையில் உங்கள் பிடிப்பு வலுவடையும். அரசாங்க அதிகாரிகள் சில பெரிய நன்மைகளைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டில் வியாபாரம் செய்பவர்களுடன் சேர்ந்து பண முதலீடு செய்து அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

தனுசு: நீங்கள் வாழ்வில் முன்னேற இந்த வாரம் பல வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும், உங்கள் வாழ்க்கைத்துணை சற்றே மனச்சோர்வடையக்கூடும், அவர்களைத் தனிமையாக உணர விடாதீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாகவே இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நடக்கும். உங்கள் எதிரிகளும் கூட உங்களுக்குச் சாதகமான விஷயங்களையே சொல்வார்கள், அதனால் நீங்கள் பயனடைவீர்கள். இந்த வாரம் நீங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். வியாபாரம் தொடர்பான சில புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக அமையும். மன அழுத்தம் நீங்கும். சற்று உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் மனதில் அவர்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி அவர்கள் மீது அதிக அன்பைப் பொழிவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நன்மை தரும். சக ஊழியர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம். இதன் காரணமாக, பணியிடத்தில் உங்கள் நிலை மேம்படும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரம் சம்பந்தமாக பயணம் செய்வீர்கள். மாணவர்கள் இப்போது தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக அமையும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அன்புடன் சிறிது கவலையையும் உணர்வார்கள். வாழ்க்கைத் துணையுடன் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். உங்களிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் வேலையில் கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் தொலைதூரப் பயணங்களால் நன்மைகள் அடைவார்கள். தொழிலுக்கு நல்ல நேரமிது. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் துணையுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவர்களுக்கும் இந்த வாரம் நன்றாக இருக்கும்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக அமையும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். அவசரப்பட்டு எதிர்மாறாக பேச வேண்டாம். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் மனைவியிடமிருந்து சில பயனுள்ள விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இது உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் வேலையில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வியாபாரம் வளர்ச்சியடையும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் நிதி நிலைமை குறையக்கூடும். வருமானம் நன்றாக இருக்கும். தொழில் வாழ்க்கையை மேம்படுத்த இன்னும் சில முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். மாணவர்களின் படிப்பில் சிக்கல்கள் இருக்கலாம்.

இதையும் படிங்க: palani murugan temple: பழனி முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.