ETV Bharat / bharat

பூமி தினத்தில் புதிய மாற்றங்கள் - கூகுள் வெளியிட்ட Doodle!

author img

By

Published : Apr 22, 2022, 5:06 PM IST

உலகத்தில் 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 22அன்று புவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் Doodle ஒன்றை வெளியிட்டுள்ளது.

பூமி தினத்தில் புதிய மாற்றங்கள்!
பூமி தினத்தில் புதிய மாற்றங்கள்!

பூமி சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வெடித்து சிதறி உயிரினங்கள் உருவமாற்றம் அடைந்து பல்லுயிரினமாகவும், பலதரப்பட்ட உயிரினங்களாகவும் மாற்றமடைந்தது வரை மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானதாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22அன்று புவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1970ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனஸ்கோ மாநாட்டில் ஜான் மெக்கானல் என்பவர் உலக அமைதிக்காக குரல் கொடுத்து வந்தார். அவரே மக்களிடையே புவியைக் காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த புவி தின கொண்டாட்ட ஆலோசனையை வழங்கினார்.

இதனையடுத்து ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணர் கேலார்ட் நெல்சன் என்பவர், ஏப்ரல் 22 அன்று புவி தினத்தை கடைபிடிக்க அனைத்து நாடுகளுக்கும் அழைப்பை விடுத்தார். ஆண்டுதோறும் ஏப்ரல் 22 பூமியின் வடகோளப்பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப்பகுதி இலையுதிர்க்காலமாகவும் காணப்படுவது முக்கியமானதாகும்.

கூகுளின் Doodle: கூகுள் நிறுவனம் இந்த புவி தினத்தை அனுசரிக்கும் விதத்தில் பருவ நிலை மாற்றத்தால் பூமியின் முக்கியமான இயற்கை எவ்வாறு மாறியுள்ளது என செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்தப் படங்கள் உலகின் மிக முக்கியமான இயற்கை சூழ் இடங்களை பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்டவையாக உள்ளன.

கிளிமாஞ்சாரோ: ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் உள்ள உயரமான எரிமலை கிளிமாஞ்சாரோ, இந்த மலையானது கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கிளிமாஞ்சாரோ மலையின் உச்சியில் இருந்த பனிப்பாறை உருகி தற்போது மிக சிறியதாக இருப்பதை கூகுள் சேட்டிலைட் படத்தில் வெளியிட்டுள்ளது.

கிளிமஞ்சரோ
கிளிமாஞ்சாரோ

கிரீன்லாந்து பனிப்பாறைகள்: கிரீன்லாந்த் நாட்டில் உள்ள வடக்குப் பகுதிகளில் எடுக்கப்பட்ட செயற்கை கோள் புகைப்படத்தில் பனிப்பாறைகள் படிப்படியாக உருகுவதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி கடல் நீர் மட்டம் அதிகரிப்பதில் கிரீன்லாந்த் பனிப்பாறைகள் உருகுவது முக்கிய பங்காகும்.

கிரின்லாந்து பனிப்பாறைகள்
கிரீன்லாந்து பனிப்பாறைகள்

ஆஸ்திரேலியா பவளப்பாறைகள்: இந்த வரிசையில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவின் கடலுக்கடியில் இருக்கும் பவளப்பாறைகளின் புகைப்படங்கள் ஓரிரு மாதத்திலேயே பெரும் மாற்றங்களை அடைந்துள்ளது. இதனால் பூமியில் பருவ நிலை மாற்றங்கள், வெப்பமயமாதல் என பெரிய மாற்றங்களும் பேராபத்துகளும் விளையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மனிதர்கள் இதன் ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க:மக்களுக்கு குட் நியூஸ்! - கோடையில் குளு குளு மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.