ETV Bharat / bharat

"வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்" - பிரதமர் மோடி

author img

By

Published : Feb 9, 2022, 10:17 PM IST

நாட்டில் வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

dynasty-politics-is-threat-to-democracy-says-pm-modi
dynasty-politics-is-threat-to-democracy-says-pm-modi

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், "பாஜக மக்களுக்கு சேவை செய்யும் கட்சி. அனைத்து மாநிலங்களிலும் பாஜக அலை வீசுவதை என்னால் பார்க்க முடிகிறது. வரும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக பெரும்பான்மை உடன் வெற்றி பெறும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு மாநிலங்கள் தங்களது லட்சியங்களை அடைய வேண்டும் என்று பாஜக நம்புகிறது. அதன்படியே கட்சி செயல்படுகிறது. இதை நானும் முதலமைச்சராக இருந்தபோது புரிந்துகொண்டேன். முன்பெல்லாம், உலக தலைவர்கள் டெல்லிக்கு மட்டுமே அழைத்துவரப்படுவார்கள். ஆனால் நான் பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து செல்கிறேன். ஏனென்றால் மாநிலங்களை பாஜக மதிக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமையை நாங்கள் நம்புகிறோம்

பலமுறை தோல்வியடைந்த பாஜக, வெற்றி பெறத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும், நாங்கள் அடித்தட்டு மக்களுடன் இணைய முயற்சி செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை தேர்தல்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் போன்றவை, அதில் உள்ள வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு பாஜகவை மெருகேற்றிக்கொள்கிறோம்.

நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை நம்புகிறோம். ஆனால் சில தலைவர்கள் பிளவு ஆட்சி கொள்கையை பின்பற்றுகிறார்கள். நாட்டின் முன்னேற்றம் பொருளாதாரத்தில் சிறந்த விளங்கும் மாவட்டங்களை கண்டறிந்து ஊக்குவிப்பத்தில் உள்ளது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட சிறந்த மாவட்டங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவற்றில் சில மாவட்டங்கள் பல்வேறு வகையில் தேசிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.

வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல்

நாட்டில் வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. குறிப்பிட்டு சொன்னால் உத்தரப் பிரதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் பதவிகளை வகித்து வருவதாக புகார் வந்துள்ளது. வம்சக் கட்சிகளில் பெரும்பாலும் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் இரண்டு அரசியல் கட்சிகள் பல தசாப்தங்களாக வம்ச அரசியலை கடைப்பிடித்து வந்துள்ளது.

இதே நிலைமைதான் ஹரியானா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் நிலவிவருகிறது. இதே கேள்வி பாஜகவை நோக்கியும் எழுப்பப்படுகிறது. ஆனால், ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரிவருக்கு கட்சியில் சீட்டு கொடுப்பதற்கும், தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமை பதவிகள் வகிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதன்காரணமாகவே தொடர்ந்து வெற்றி பெறுவோம். பாஜக 2014இல் வெற்றி பெற்றது. 2019இல் வெற்றி பெற்றது. அதேபோல மக்கள் எங்களது சேவையை பார்த்து 2022ஆம் ஆண்டும் வெற்றி பெற செய்வார்கள்.

'நாடாளுமன்றத்தை புறக்கணிப்பவருக்கு நான் எப்படி பதிலளிப்பேன்'

நாடாளுமன்றத்தில் வேலையில்லா திண்டாட்டம், இந்தியா-சீனா பிரச்னை குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், காங்கிரசை தாக்கியதாக கேள்விகள் எழுகின்றன. நாடாளுமன்றத்தை புறக்கணிப்பவருக்கு நான் எப்படி பதிலளிப்பேன். நானும், பாஜகவும் யாரையும் தாக்கி பேசுவதில்லை. நாங்கள் வாக்குவாதத்தில் நம்பிக்கை வைப்பதில்லை.

எனக்கு ஒருவரை தாக்கி பேச தெரியாது. ஆனால் சில நேரங்களில் தர்க்கம் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் எனது வார்த்தைகள் விளக்கக்கூடும். அந்த வகையில் நாடாளுமன்றத்தில் நான் ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளை மட்டுமே பேசினேன். சில கேள்விகளுக்கு வெளிவுறத்துறை அமைச்சகமும், பாதுகாப்பு அமைச்சகமும் பதில்களை அளித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மொழியை மேற்கோள்காட்டி படித்தேன். உலகின் மிக பழமையான மொழி என்பதை உலகமே ஒப்புக்கொள்வதை பெருமையாக கருதுகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: மக்களவையில் மத்திய அமைச்சருக்கும் திமுக எம்.பி.க்கும் வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.