ETV Bharat / bharat

'ஜெயிலர்' படத்தில் RCB அணியின் ஜெர்சி பயன்படுத்திய காட்சியை நீக்க உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:15 PM IST

RCB vs Jailer Movie: "ஜெயிலர்" படத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை பயன்படுத்திய காட்சியை நீக்கவும், தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஆகிய தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

"ஜெயிலர்" படத்தில் IPL-RCB அணியின் ஜெர்சி பயன்படுத்திய காட்சியை நீக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
delhi-high-court-rcb-team-jersey-theatrical-release-jailer-movie

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் IPL அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தரப்பில் "ஜெயிலர்" திரைப்படத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்திருந்த காட்சிகளை நீக்க கோரி மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், "நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் "ஜெயிலர்". இப்படத்தின் காட்சிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்து காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்திருந்த ஓப்பந்த கொலையாளி ஒருவர் பெண்களுக்கு எதிராகவும் அவதூறு பரப்ப கூடிய வகையில் சில கருத்துக்களையும் திரைப்படத்தில் பேசியிருப்பதாகவும், எங்களிடம் உரிய அனுமதி பெறாமல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்ஸி பயன்படுத்தப்பட்டதாகவும், மேலும் இது தங்கள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நன் மதிப்பை கெடுக்கும் விதாமாக உள்ளது. எனவே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) ஜெர்சி அணிந்திருந்த காட்சிகளை "ஜெயிலர்" திரைப்படத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்". என மனுவில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: Jailer enters 600cr club: "தலைவர் வேறரகம் பாத்து உஷாரு.." 600 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஜெயிலர்!

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம்.சிங் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "ஜெயிலர்" திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் IPL அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியினர் தரப்பு வாதங்களை கேட்டறிந்தார் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதன் பின்பு பிறப்பித்த உத்தரவில், செப்டம்பர் 1ம் தேதி முதல் IPL அணியான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்திருந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் என "ஜெயிலர்" திரைப்பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டனர். மேலும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஆகிய தளங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Jason Sanjay: இயக்குநராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய்.. லைகா நிறுவனம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.