ETV Bharat / bharat

என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா மோடிஜி...? மனிஷ் சிசோடியா கேள்வி...!

author img

By

Published : Aug 21, 2022, 1:31 PM IST

மதுபான கடை உரிம ஊழல் தொடர்பாக சிபிஐ தனக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் தன்னை கண்டுபிடிக்க முடியவில்லையா? என்றும் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

Delhi
Delhi

டெல்லி: மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முக்கிய குற்றவாளி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், மனிஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிசோடியா, "உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன, முறைகேடாக ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை. இப்போது மனிஷ் சிசோடியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறீர்கள். இது என்ன நாடகம் மோடிஜி? உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? நான் டெல்லியில்தான் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன், நான் எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐயின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், "சாமானியர்கள் பணவீக்கத்துடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் இந்த நேரத்தில், மத்திய அரசு மாநில அரசுகளுடன் சேர்ந்து, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். மாறாக அவர்கள் முழு நாட்டையும் எதிர்த்து போராடுகிறார்கள். தினமும் காலையில் எழுந்து சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து விளையாடுகிறார்கள். மத்திய அரசு இப்படி இருந்தால் நாடு எப்படி முன்னேறும்?" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மதுபானக் கடை உரிம ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முக்கிய குற்றவாளி... மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் சரமாரி குற்றச்சாட்டு...


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.