ETV Bharat / bharat

சிக்கன் கேட்ட வாடிக்கையாளருக்கு எலிக்கறி கொடுத்த உணவகம்.. பஞ்சாபி உணவகத்தில் அலப்பறை!

author img

By

Published : Aug 17, 2023, 11:17 AM IST

மும்பையில் சிக்கன் உணவு கேட்டவருக்கு இறந்த எலியை சமைத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Rat
Rat

மகாராஷ்டிரா: மும்பை உணவகத்தில் அசைவ உணவு கேட்டவருக்கு இறந்த எலியை சமைத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புறநகர் பகுதியான பாந்திராவில் பஞ்சாபி உணவக ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வங்கிப் பணியாளர் ஒருவர் உணவு அருந்தச் சென்று உள்ளார்.

ஷாப்பிங் உள்ளிட்ட பணிகளை முடித்த கையோடு பஞ்சாபி உணவுகத்திற்குள் நுழைந்த அந்த வங்கி ஊழியர், உணவக பணியாளரிடம் தனக்கு சிக்கன் உணவு தருமாறு கோரி உள்ளார். சிறிது நேரத்தில் வங்கி ஊழியருக்கு உணவு பரிமாறப்பட்ட நிலையில், அவரும் அதை விரும்பி சாப்பிட்டு உள்ளார்.

சிக்கன் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது எதோ ஒரு அசவுகரியத்தை வங்கி ஊழியர் உணர்ந்து உள்ளார். இருப்பினும் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்து உள்ளார். மீண்டும் மீண்டும் அப்படியே தோன்ற அவர், உணவை பரிசோதிக்க தொடங்கி உள்ளார்.

அப்படி பார்த்தவருக்கு பேரதிர்ச்சியாக உணவில் இறந்த குட்டி எலி கிடந்து உள்ளது. மேலும், ஆரம்பத்தில் எலி இறந்து கிடந்து கிடப்பதை கவனிக்காமல் அதன் சில பகுதிகளை வங்கி ஊழியர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. உணவில் எலி கிடப்பது குறித்து உணவக பணியாளர்களிடம், வங்கி ஊழியர் புகார் அளித்து உள்ளார்.

இதன்பின் வங்கி ஊழியருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து வங்கி ஊழியர் அளித்த புகாரில், பஞ்சாபி உணவகத்தின் மேலாளர் மற்றும் இரண்டு சமையலர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் உணவு கேட்டவருக்கு எலியை சமைத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பிறந்த ஒரே நாளில் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.