ETV Bharat / bharat

ரூ.2,100 கோடியில் நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை.. ஹைதராபாத்தில் கட்ட கேசிஆர் திட்டம்!

author img

By

Published : Jun 8, 2023, 3:49 PM IST

ஹைதராபாத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை கட்ட தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள இந்த டிம்ஸ் மருத்துவனைகளுக்கு 32 ஏக்கர் நிலத்தை தெலங்கானா அரசு ஒதுக்கியுள்ளது.

Countrys largest
மருத்துவமனை

ஹைதராபாத்: தெலங்கானா மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய மருத்துவமனைகளை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தெலுங்கானா மருத்துவ அறிவியல் கழகம் (TIMS - Telangana Institute of Medical Sciences) என்ற பெயரில் மூன்று மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன. ஹைதராபாத்தின் சனாத்நகர், அல்வால் மற்றும் எல்பி நகரில் இந்த டிம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன. இதற்காக 25 லட்சம் சதுர அடி நிலத்தை தெலங்கானா அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் இந்த மருத்துமவனைகள் கட்டப்படவுள்ளன.

இந்த மருத்துவமனையை மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் கட்ட தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையான தரமான மருத்துவம் இந்த புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் வழங்கப்படும் என்றும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மூன்று டிம்ஸ் மருத்துவமனைகளும் தலா ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.

இந்த மூன்று டிம்ஸ் மருத்துமனைகள் மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள நிம்ஸ் மருத்துவமனையும் மேம்படுத்தப்படவுள்ளது. நிம்ஸ் மருத்துவமனை 22 ஏக்கரில் 1,300 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இது, 1,570 கோடி செலவில் 2,100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய மருத்துவமனைகளில் இதய நோய், நுரையீரல், சிறுநீரகம், மூளை, கல்லீரல் உள்ளிட்ட 34 வகையான சிறப்பு மருத்துவப் பிரிவுகள் நிறுவப்படவுள்ளன.

இந்த டிம்ஸ் மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாகவும் செயல்படும். இதில் அமைய இருக்கும் 16 சிறப்பு மற்றும் 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பிரிவுகளில் முதுகலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களுக்கு குடியிருப்பும் கட்டப்படவுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத்திடம் பேசும்போது, "25 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த மருத்துவமனை வளாகம் நாட்டிலேயே மிகப் பெரியது. இந்த மருத்துவமனை வளாகத்திற்காக 32 ஏக்கர் நிலத்தை தெலங்கானா அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஆண்டு ஆசிபாபாத், கமரெட்டி, கம்மம், விகாராபாத், ஜனகாமம், சிரிசில்லா, நிர்மல், பூபாலபள்ளி, கரீம்நகர் ஆகிய இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், கரீம்நகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல் இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 100 மருத்துவ இடங்கள் கிடைக்கும். மாநிலம் உருவானபோது, 5 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. அதன் பிறகு 21 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: Gitanjali Aiyar: தூர்தர்ஷனின் பிரபல செய்தி தொகுப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.