ETV Bharat / bharat

இணையவழியில் நாளை கூடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்

author img

By

Published : Nov 26, 2020, 8:27 PM IST

டெல்லி: கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் தருண் கோகோய், அகமது பட்டேல் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை கூடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையவழியில் நாளை கூடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் !
இணையவழியில் நாளை கூடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் !

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “கோவிட் -19 பாதிப்பால் உயிரிழந்த மூத்தத் தலைவர்கள் தருண் கோகோய், அகமது பட்டேல் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறும். இந்தக் கூட்டம் நாளை (நவ. 27) காலை 11 மணி அளவில் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக கோவா சென்றுள்ள நிலையில் காணொலி வாயிலாக நாளை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என அறியமுடிகிறது.

இணையவழியில் நாளை கூடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் !
இணையவழியில் நாளை கூடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்!

இந்தக் கூட்டத்தில் கட்சியின் உள்கட்சி சீரமைப்பு, தலைமைத் தேர்வு, பிகார் தேர்தல் தோல்வி போன்ற பல்வேறு விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 144 தடை உத்தரவு தொடர்பாக நீடிக்கும் குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.