ETV Bharat / bharat

Punjab elections 2022: சரண்ஜித் சிங் சன்னி பலம்- பலவீனம்!

author img

By

Published : Feb 7, 2022, 2:15 PM IST

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிய கையோடு, பஞ்சாப் மீது கண்பதித்துள்ளது ஆம் ஆத்மி. மறுபக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு பஞ்சாப்பில் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Channi
Channi

சண்டிகர் : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் பிப்.10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) மாலை பஞ்சாப்பில் காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியால் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டார்.

Congress CM candidate Channi s advantage and Disadvantages
ராகுல் காந்தி

முதலமைச்சர் பட்டியலில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து, சரண்ஜித் சிங் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துவிட்டார். தற்போது, சரண்ஜித் சிங் சன்னியின் சாதகம் பாதகம் குறித்து பார்க்கலாம்.

காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி

Congress CM candidate Channi s advantage and Disadvantages
சரண்ஜித் சிங் சன்னி

சாதகங்கள்:-

  1. பட்டியலின முகமாக இருப்பதால் பஞ்சாப்பின் 32 விழுக்காடு பட்டியலின (SC) மக்களை கவர முடியும்.
  2. பாஜக பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. ஆனால் ஒருவர் கூட பட்டியலினத்தை சேர்ந்தவர் அல்ல. சன்னியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கு ஆதரவான பேரியக்கம் காங்கிரஸ் என்ற தகவலை கொண்டு செல்ல முடியும்.
  3. ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கை எதிர்கொள்ள பட்டியலின மக்களின் ஆதரவு ஒரு சேர கிடைப்பது அவசியம்.
  4. பஞ்சாப் மாநிலத்தில் 111 நாள்கள் மட்டுமே முதல் அமைச்சராக இருந்த சன்னி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார். மற்ற முதல் அமைச்சர்களின் பதவிக் காலத்தில் பஞ்சாப் இந்தளவு வளர்ச்சியை பெறமுடியவில்லை.
  5. சரண்ஜித் சன்னி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் வாக்களிப்பார்கள்.

பாதகங்கள்:-

சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான பாதகங்கள் குறித்து பார்க்கலாம்.

  1. மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மணற்கொள்ளை வழக்குகளில் சரண்ஜித் சன்னி உறவினர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது அமலாக்கத்துறை விசாரணை கூட நடைபெற்றுவருகிறது. மேலும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின்போது பணமும் சிக்கியுள்ளது.
  2. சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராக கேப்டன் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் மற்றும் காங்கிரஸில் உள்ள இந்து வாக்காளர்களின் வாக்கு வங்கி முகமாக காணப்படும் ஜாகர் ஆகியோர் உள்ளனர். சன்னி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் 67 சதவீத பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறுவது கடினம்.
  3. பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் சரண்ஜித் சன்னி உடன் பிரதமர் அலுவலகத்துக்கு மனக்கசப்பு நிலவுகிறது. ஒருவேளை சரண்ஜித் சன்னி முதலமைச்சராக வெற்றி பெற்றால் கூட மத்திய அரசுடன் தொடர்பு கொள்வது இணக்கமாக இருக்காது. மாநில அரசை நிர்வகிக்க மத்திய அரசின் மானியத் திட்டங்கள் தேவைப்படும்.
  4. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மூத்தத் தலைவரும், மாநில முன்னாள் முதலமைச்சருமான கேப்டன் அமரீந்தர் சிங், நிச்சயம் சன்னிக்கு பெரும் சவாலாக திகழ்வார். ஏனெனில் அவருடன் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர். மற்றொருபுறம் நவ்ஜோத் சிங் சித்துவின் வலிமையையும் சாதாரணமாக எடை போட முடியாது.
  5. சரண்ஜித் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளையும் அவர் வென்றால், ஏதாவது ஒன்றை இராஜினாமா செய்ய நேரிடும். இதுவும் அவருக்கு தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்தும்.

மிரட்டும் ஆம் ஆத்மி

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்.20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுவருகிறது. இங்கு கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று 2ஆம் இடம்பெற்றது.

Congress CM candidate Channi s advantage and Disadvantages
நவ்ஜோத் சிங் சித்து

சரண்ஜித் சிங் சன்னி முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். நவ்ஜோத் சிங் சித்து, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவர் ஆவார்.

கேப்டன் அமரீந்தர் சிங் பதவி விலகியதும், தனக்கு முதல் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்போதும் அவருக்கு முதல் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவரது ராஜினாமா காங்கிரஸ் தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய அரசியலமைப்பின் பிரதிபலிப்பே இந்துத்துவா- மோகன் பகவத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.