ETV Bharat / bharat

அமிர்தசரஸில் 400 மொஹல்லா கிளினிக்குகள் திறந்து வைப்பு

author img

By

Published : Jan 27, 2023, 11:56 AM IST

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் 400 மொஹல்லா கிளினிக்குகளை அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அமிர்தசரஸில் 400 மொஹல்லா கிளினிக்குகள் இன்று திறந்து வைப்பு!
அமிர்தசரஸில் 400 மொஹல்லா கிளினிக்குகள் இன்று திறந்து வைப்பு!

அமிர்தசரஸ்: 2015ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசால் ‘மொஹல்லா கிளினிக்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கிளினிக்குகளில் இலவச மருத்துவம், மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பஞ்சாப்பில் முதற்கட்டமாக 100 மொஹல்லா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து நேற்று (ஜன.26) பதிண்டாவில் உள்ள ஷஹீடு பகத் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் பவந்த் மான் சிங், ‘ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமிர்தசரஸில் வைத்து மொஹல்லா கிளினிக்குகளை திறந்து வைக்க உள்ளார்.

மொஹல்லா கிளினிக்குகளுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது” என்றார். அதன்படி, இன்று (ஜன.27) அமிர்தசரஸில் உள்ள புட்லிகரில், 2ஆம் கட்டமாக 400 மொஹல்லா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டன. ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு மொஹல்லா கிளினிக்குகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

பழைய மருத்துவமனைகள், காலி அரசு கட்டடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவையும் மொஹல்லா கிளினிக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இவைகளுக்கு பழுது பார்த்தல், பெயிண்ட் அடித்தல், சீலிங் மற்றும் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில சுகாதார அமைச்சர் பால்பிர் சிங் கூறுகையில், ‘மொஹல்லா கிளினிக்குகளால் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன் பெற்றுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்துகளை பெற்றுள்ளனர்’ என்றார்.

ஆம் ஆத்மி கிளினிக் என அழைக்கப்படும் மொஹல்லா கிளினிக்குகளில் நவீன வடிவத்தில், நோயாளிகளின் வருகைப்பதிவு, மருத்துவர்கள் அறிவுறுத்தும் மருந்து விவரம் மற்றும் மருந்துகள் வழங்கும் முறை ஆகியவை ‘டேப்’ மூலம் செய்யப்படுகிறது. இந்த கிளினிக்குகளில் இதுவரை 100 வகையான மருந்துகள் மற்றும் 41 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப்புலிக்கு உடல்நலக்கோளாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.