ETV Bharat / bharat

Viral Video - விமானத்தில் வீதிச் சண்டை - என்னவாம்?

author img

By

Published : Dec 29, 2022, 8:15 PM IST

பாங்காக் - கொல்கத்தா விமானத்தில் இரு பயணிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பயங்கர வைரல் ஆகி வருகிறது.

விமானத்தில் வீதிச் சண்டை: வைரலாகும் வீடியோ...
விமானத்தில் வீதிச் சண்டை: வைரலாகும் வீடியோ...

Viral Video - விமானத்தில் வீதிச் சண்டை - என்னவாம்?

டெல்லி: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஸ்மைல் நிறுவனத்தின் விமானம் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு உள்ளது. ஓடுதளப் பாதையில் இருந்து விமானம் பறக்க இருந்த நிலையில் விமானத்தினுள் இரு பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பில் முடிய ஒரு பயணி மற்றொரு பயணியை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். சில விநாடிகளில் அருகில் இருந்த மற்ற பயணிகளும் சேர்ந்து பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டனர். சண்டையிட்டுக் கொண்ட பயணிகளை விமானப் பணிப் பெண் சமாதானப்படுத்த முடியாமல் தவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் 26ஆம் தேதி வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் சக பயணி எடுத்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. விமானத்தில் பயணிகள் இருவர் சண்டையிட்டுக் கொண்டதற்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் குறித்து விமான நிறுவனம் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நியூ இயர் பார்ட்டியில் பயங்கரவாத தாக்குதல் புரிய சதி - புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.