ETV Bharat / bharat

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை... என்ன காரணம் தெரியுமா?

author img

By

Published : Jul 20, 2023, 10:46 PM IST

எதிர்வரும் விழாக் காலங்களை கருத்தில் கொண்டு உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கவும், விலை ஏற்றத்தை தவிர்க்கவும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

Rice
Rice

டெல்லி : வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்யப் மத்திய அரசு தடை விதித்து உள்ளது. உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கவும், விலை ஏற்றத்தை தவிர்க்கவும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒட்டுமொத்த அரிசி வகைகளில் பாஸ்மதி இல்லாத மற்ற அரிசி வகைகள் மட்டும் 25 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு விலை ஏற்றம், தட்டுபாடு, பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவும், உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பாஸ்மதி அரிசி அல்லாத மற்ற வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி கொள்கை இலவசம் என்பதில் இருந்து தடை செய்யப்பட்டு திருத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்தடுத்து வரும் திருவிழாக் காலங்களை கருத்தில் கொண்டு உள்நாட்டு சப்ளையை ஊக்குவிக்கவும், சில்லரை விலையை கட்டுக்குள் வைத்து இருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் வேக வைக்காத பாஸ்மதி அரிசி மற்றும் பாஸ்மதி அரிசியை மொத்த அளவில் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி கொள்கையில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளபடவில்லை என மத்திய உணவுத் துறை தெரிவித்து உள்ளது.

உள்நாட்டு சப்ளையில் அரிசியின் விலை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சில்லரை விற்பனையில் கடந்த ஒராண்டில் மட்டும் 11 புள்ளி 5 சதவீதமும், கடந்த மாதத்தில் மட்டும் 3 சதவீதமும் அரிசி விலை உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் விலையை குறைக்கவும், உள்நாட்டு சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யவும் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வெள்ளை அரிசியின் ஏற்றுமதி, கடந்த 2021- 2022 நிதியாண்டின் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 33 புள்ளி 66 லட்சம் டன்னில் இருந்து 2022 - 23 நிதி ஆண்டின் செப்டம்பர் முதல் மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் 42 புள்ளி 12 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : கோடீஸ்வர எம்.எல்.ஏக்களின் பட்டியல் வெளியீடு.... யார் முதல்ல தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.