ETV Bharat / bharat

2023 இறுதிக்குள் ஹைட்ரஜன் ரயில் சேவை - மத்திய அரசு இலக்கு!

author img

By

Published : Dec 29, 2022, 10:46 PM IST

மேக் இன் இந்தியா திட்டத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹைட்ரஜன் ரயில்
ஹைட்ரஜன் ரயில்

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயில் சேவையை 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2050ஆம் ஆண்டிற்குள் ஜீரோ கார்பன் உமிழ்வு திட்டம் என்ற பாரீஸ் ஒப்பந்தத்தின் படி உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்கும் பணியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இதற்கானப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் ரயில் சேவை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக அண்மையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் வெளியிட்டார்.

உலக அளவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. கார்டியா ஐலேண்ட் என்ற பெயரில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. பிரான்சின் அல்ஸ்டாம் என்ற நிறுவனம் தயாரித்த நிலையில், தற்போது ஜெர்மனியில் 62 ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன.

நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு வரப்பிரசாதம் அமைய இருப்பதாக ஹைட்ரஜன் ரயில் கூறப்படும் நிலையில், இதனால் டிக்கெட் விலை பாதியாக குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய ரயில்வேயில் 37 சதவீத டீசல் இன்ஜின்கள் உள்ளதாகவும்; 1950 - 60 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட டீசல் இன்ஜின்களுக்கு ஆண்டுக்கு சராசரி 237 கோடி லிட்டர் டீசல் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 38 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைட் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் ரயில் இந்திய ரயில்வேக்கு புது உத்வேகத்தை அளிக்கும் என்றும்; 2030ஆம் ஆண்டுக்குள் ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைய உதவும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புலம்பெயர்ந்தோர் வாக்களிக்க ஆர்.வி.எம் இயந்திரம் - தேர்தல் ஆணையம் புதுதிட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.