ETV Bharat / bharat

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா! வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!

author img

By

Published : Apr 20, 2023, 2:24 PM IST

Updated : Apr 20, 2023, 2:34 PM IST

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Rajnath Singh
Rajnath Singh

டெல்லி : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளார். டெல்லியில் நடைபெறும் இந்திய ராணுவத்தின் படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள இருந்தார்.

லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகள் தென்படும் நிலையில் வீட்டில் தனிப்படுத்தப்பட்டு உள்ள ராஜ்நாத் சிங் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் ராணுவத் தளபதிகள் மாநாடு கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. நேற்று (ஏப் 19) நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் தரைப் படை தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்ட மூத்த ராணுவ தளபதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை கையாளும் பயிற்சிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடி அவதூறு வழக்கு - ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

Last Updated : Apr 20, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.