ETV Bharat / bharat

தலையை துண்டித்து உடலுடன் பயணம்.. லாரி டிரைவர் சிக்கியது எப்படி?

author img

By

Published : May 24, 2023, 11:17 AM IST

Updated : May 24, 2023, 3:04 PM IST

தலையை துண்டித்தது மட்டுமல்லாது, இறந்தவரின் சடலத்துடன் லாரி டிரைவர் பயணம் செய்த சம்பவம், சட்டீஸ்கரில் அரங்கேறி உள்ளது. இச்சம்பவத்தில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Cargo driver arrested with headless corpse on his truck in Chhattisgarh
சரக்கு வாகனத்தில் தலை இல்லா முண்டத்துடன் பயணம் - டிரைவர் கைது!

சாரங்கர் பிலாக்கர்: தலையைத் துண்டித்தது மட்டுமல்லாது, தலை இல்லாத சடலத்தை, தனது வாகனத்தில் ஏற்றி ஊர் ஊராய், சுற்றி வந்த சம்பவம், சட்டீஸ்கர் மாநிலம்ஷரான்கர் பிலாய்கர் க்பகுதியில் நடந்து உள்ளது. துண்டிக்கப்பட்ட தலை யாருடையது என்ற விபரம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டு உள்ள உமா சங்கர், சட்டீஸ்கர் மாநிலத்தின் சர்ஷிவா பகுதியைச் சேர்ந்தவர் ஆவர். திங்கட்கிழமை, இரவு, உமா சங்கர், ஒருவரின் தலையைத் துண்டித்து உள்ளார். பின் அவரின் தலை இல்லாத சடலத்தை, தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார். நள்ளிரவு, உமா சங்கர், தனது வீட்டிற்கு வந்தடைந்தார். லாரியை, வீட்டின் முன்புறம் நிறுத்தி விட்டும் படுக்கச் சென்று விட்டார். இந்த லாரி, 5 காவல்நிலையம் சரக பகுதிகளைக் கடந்து வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாள் காலை, உமா சங்கர் வழக்கம்போல, தனது வேலையைத் துவங்கினார். அப்போது, அந்த பகுதியிலிருந்த சிலர், லாரியின் பிற்பகுதியில், தலை இல்லாத முண்டம் இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து, அவர்கள், போலீசிற்குத் தகவல் அளித்தனர். போலீசார், உமா சங்கரைக் கைது செய்யும் பொருட்டு, ககோரி கிராமத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர் தற்போது ராய்காட் பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகரில் வசித்து வருகிறார். உமா சங்கரை கைது செய்ய, அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

5 போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், லாரி பயணப்பட்ட போதிலும், யாரும் இதைக் கவனிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டு உள்ள உமா சங்கர் கொடூர குற்றவாளி ஆவார். ராய்கர் பகுதியில் நடைபெற்ற பரசுராமர் ஜெயந்தி விழாவில், வாளை வீசி சுழற்றிய நிகழ்வில், அவர் பிரபலம் அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, போலீசார், உமா சங்கரை, கொடூர ஆயுதங்கள் வைத்திருந்ததான பிரிவில், கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தான் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தார். அவர் மீது 4 அல்லது 5 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குனோ பூங்காவில் மூன்று மாதத்தில் 4வது சிவிங்கிப்புலி குட்டி உயிரிழப்பு

Last Updated : May 24, 2023, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.