ETV Bharat / bharat

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அட்டகாசமான சாதனம்!

author img

By

Published : Sep 11, 2020, 4:00 PM IST

உடல் வெப்பநிலையை கண்காணிப்பது, கைகளில் கிருனிநாசினி தெளிப்பது எனப் பல்வேறு செயல்பாடுகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் புதிய சாதனம் ஒன்றை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

Unique all-in-one kiosk to prevent Covid-19
Unique all-in-one kiosk to prevent Covid-19

நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகின்றன.

கரோனா பரவலை முடிந்தவரை குறைக்க பல்வேறு வகையான சாதனங்களையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து உருவாக்கிவருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரிஹஸ்பதி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் முக அடையாளம் (face recognition), உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பது, கைகளில் கிருனிநாசினி தெளிப்பது, புற ஊதாக்கதிர்கள் மூலம் கிருமிகளை நீக்குவது ஆகிய அனைத்தையும் மேற்கொள்ளும் ஒரு சாதனத்தை வடிவமைத்துள்ளனர்.

கோவிப்ரோ (COVIPRO) என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம், தற்போது தெலங்கானாவில் நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தெலங்கானா அமைச்சர்களின் பாராட்டையும் இந்தச் சாதனம் பெற்றுள்ளது.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக கோவிப்ரோ ஹைதராபாத்தில் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுவருகிறது. ஒரு நாளில் 400 கோவிப்ரோ சாதனங்கள் வரை உருவாக்க முடியும் என்று பிரிஹஸ்பதி டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.

இதிலுள்ள எல்.ஈ.டி. திரை முக்கியத் தகவல்களைக் காட்ட உதவும். கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் இந்தத் திரையில் விழிப்புணர்வு செய்திகளையும் பரப்ப முடியும்.

பிரிஹஸ்பதி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகர் பாப்போலு கூறுகையில், "கரோனா நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பொது இடத்திற்குப் போவதே ஒரு பெரிய சவாலாகிவிட்டது.

மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களை ஒவ்வொரு நபரும் கண்காணித்து கிருமிநாசினி தெளிக்க வேண்டி சூழல் தற்போது உள்ளது.

ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒவ்வொரு இயந்திரங்களை நிறுவ வேண்டியிருப்பதால் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள கோவிப்ரோ இந்த அனைத்து பிரச்னைக்கும் பார்த்துக்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கோவிப்ரோ சாதனம் தற்போது ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்டர் செய்யப்படும் கோவிப்ரோ 30 நாள்களில் இந்தியாவின் எந்த இடத்திற்கும் டெலிவரி செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த 100 நாள்களில் 10,000 கோவிப்ரோ சாதனங்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தும்: உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.