ETV Bharat / bharat

தெலங்கானா ஆளுநராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் தமிழிசை!

author img

By

Published : Sep 8, 2019, 8:41 AM IST

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக மருத்துவர் தமிழிசை இன்று பதவியேற்கிறார். அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த மருத்துவர் தமிழிசையை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். இதையடுத்து, அவர் தான் வகித்துவந்த பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்தும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராகத் தமிழிசை இன்று பதவி ஏற்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், இன்று காலை 11 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஹைதராபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

தமிழிசை தெலங்கானா ஆளுநராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களும் அம்மாநில உயர் அலுவலர்களும் கலந்துகொள்கின்றனர்.

Intro:Body:

tamilisai take oath as governor


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.