ETV Bharat / bharat

' உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்'

author img

By

Published : Jun 22, 2019, 12:12 PM IST

டெல்லி: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தலைமை நீதிபதி


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான முப்பத்தொன்று என்ற எண்ணிக்கையை தற்போதுதான் எட்டியுள்ளோம்.

உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் இதுவரை 43 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 26 வழக்குகள் 25 வருடங்களுக்கு மேலாகவும், 100 வழக்குகள் 20 வருடங்களுக்கு மேலாகவும், 593 வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாகவும், 4,977 வழக்குகள் 10 வருடங்களுக்கு மேலாகவும் நடைபெற்றுவருகின்றன.

ஆகவே வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பரீசிலனை செய்ய வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாக விரைவாக நீதியை வழங்க முடியும். அதேபோல் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62இல் இருந்து 65ஆக உயர்த்துவது குறித்து பரீசிலிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31இல் இருந்து 37ஆக உயர்த்த வேண்டும். உயர் நீதிமன்றங்களில் தற்போது நிலவிவரும் 37 விழுக்காடு நீதிபதிகளின் காலி இடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.