ETV Bharat / bharat

பட்ஜெட்டில் மோடியின் அரசியல் நோக்கங்கள் - விவரிக்கும் மூத்தப் பத்திரிகையாளர்

author img

By

Published : Feb 24, 2020, 12:40 PM IST

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பிரதமர் மோடியின் அரசியல் நோக்கங்கள் குறித்து மூத்தப் பத்திரிகையாளர் சேகர் ஐயர் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

PM Modis political objectives shows up in Budget PM Modis 2020 Budget மோடியின் அரசியல் நோக்கங்கள் பட்ஜெட்டில் வெளிப்பட்டதா?- சேகர் ஐயர் மோடியின் அரசியல் நோக்கங்கள் மோடி 2020 பட்ஜெட் 2020 Budget Impacts PM Modi Budget Goals
PM Modi Budget Goals

நிர்மலா சீதாராமனின் இந்த பட்ஜெட் பொருளாதாரத்துக்குத் தேவையாக ஊக்கமளிக்கும் விதத்தில் இல்லை. கனவு பட்ஜெட்டுக்கு செய்ய வேண்டிய விஷயங்களையும் அவர் தவிர்த்துள்ளார். இதனால், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கவலையடைந்துள்ளனர். 1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களையோ அல்லது அதைவிட நல்ல சீர்திருத்தங்களையோ கொண்டுவர நிர்மலா சீதாராமனிடம் பிரதமர் மோடி எதிர்பார்த்தததாக அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். குறைந்தளவு வரிவிலக்கு அளிப்பதன் வழியாக ரூ. 40,000 கோடி வரை இழக்க மத்திய அரசு தயாராக இருந்தது.

அதேபோல், இறையாண்மை நிதிகள் வைத்திருக்கும் வெளிநாட்டு அரசுகள் இந்தியாவின் உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்தால் 100 சதவிகித வரிவிலக்கு அளிக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதேபோல், உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும் வெளிநாடுகளுக்கு ஈவுத்தொகை விநியோக வரியையும் கைவிடுவதன் மூலம் ரூ.22,000 கோடியையும் இழக்க மோடி அரசு முன்வந்துள்ளது. இதனால், நாட்டின் உள்கட்டமைப்பு விவகாரங்களில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்த ஒரு டிரில்லியன் டாலர், அதாவது ரூ. 70 லட்சம் கோடி தேவைப்படும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல், விவாட் சே விஷ்வாஷ் திட்டத்தின் கீழ் ரூ.4.90,000 கோடி நிதி, வரி தொடர்பான வழக்குகளை அபராதத்துடன் வட்டி விதித்து மன்னிப்பு அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தலைப்பு செய்தி என்பது, தனிநபர் வருமானவரி செலுத்துவோருக்கு வருமானவரிச் சட்டத்தை எளிமைப்படுத்தியதுதான். ஏராளமான வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோருக்கு வருமானவரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தற்போதுள்ள 70 வரி விலக்குகள், 100க்கும் மேற்பட்ட பல வகையான கழிவுகளையும் நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வரி விலக்குகள் வரும் ஆண்டுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தேவையான அளவுக்கு வரி செலுத்தும் முறை எளிமைப்படுத்தப்படும்; வரி விகிதமும் குறைக்கப்படும்.

நேர்மையாக வரி செலுத்துவரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிதாக வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியிடப்படும். வங்கி மோசடிகள் அதிகரிப்பால் கவலையடைந்த நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களின் டெபாஸிட் இன்சூரன்ஸ் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரித்து வழங்க டெபாஸிட் இன்சூரன்ஸ், கடன் வழங்கும் உத்தரவாத நிறுவனத்துக்கு (DICGC) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிக நிதியால் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று மோடி நம்புகிறார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் படித்த சில மணி நேரங்களில் சென்செக்ஸ் குறைந்தது. பிரதமர் மோடியோ தொலைநோக்குப் பார்வை மற்றும் அமல்படுத்தக் கூடிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி அடிப்படையில் உரிமை உறுதிசெய்யப்படுகிறது கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் பட்ஜெட் இதுவென்று மோடி கூறினார். பிரதமரின் சிந்தனை எப்போதும் கிராமப்புறங்களின் மீதுதான் இருந்துள்ளது என்பதை இந்த பட்ஜெட் காட்டியுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் புதிய ஸ்டார்ட் அப் பிசின்ஸ்களை தொடங்கும் அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன. எவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்க முடியுமென்று இந்த பட்ஜெட் உறுதியாகச் சொல்லவில்லை. ஆனால், மோடி, நிர்மலா சீதாராமன் ஆகிய இருவருமே வேளாண்மை, உள்கட்டமைப்பு, டெக்ஸ்டைல், தொழில் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமென்று நம்புகிறார்கள். நாட்டின் வேலைவாய்ப்புகளை நம்பி ஒரு தலைமுறை உருவாகிறது. அவர்களுக்கு இந்த நான்கு துறைகளும்தான் வேலைவாய்ப்பை அளிக்க முடியும்.

உடான் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்குள் 100 விமானநிலையங்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் துறைக்கு 150 ரயில்களை தாரை வார்ப்பதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் மோடியின் விருப்பங்களுக்கு நிர்மலா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். நமது பிரதமர் நல்ல வாழ்க்கைக்கும் அனைத்து தரப்பு மக்களும் இலக்கை எட்டுவதற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதை நாம் கவனத்தில் கெள்ள வேண்டும்.

வரும் 2020-21ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடந்த ரூ.15 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிஷான் ரயில், விரைவில் அழுகிவிடக் கூடிய வேளாண் பொருள்களைப் பாதுகாக்க குளிர்பதனச் சாதனங்கள் கடனுதவி பெற 'கிருஷி உதான்' திட்டம். சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 'குசூம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் வரை கடனளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவை எல்லாம் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளப்பட்டு கொண்டு வரப்பட்ட திட்டங்கள். இந்த பட்ஜெட் அறிவிப்பின்போது மத்திய அரசு பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்ய புதிய தேசிய வேலைவாய்ப்பு முகமை (NRA) அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது மோடி வெற்றிபெற்றது போன்ற ஒரு மனநிலையில் இருந்தார். அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்வதை இந்தப் புதிய நிறுவனம் ஒழுங்குமுறைப்படுத்தும். அரசுப் பணிகளுக்காக பல்வேறு தேர்வுகளை எழுதுவதை விட ஒற்றை சாளர முறையிலான ஆன்லைன் தேர்வு முறை கடைபிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

தனித்தன்மையுடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதே பிரதமரின் கனவு. அதையே நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளிப்படுத்தியுள்ளார். தனித்தன்மையுடன் கூடிய இந்தியா என்பது உயர்ந்த வாழ்க்கைத்தரம், தேவையான செல்வத்துடன் நல்ல கல்வி, வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்வது என்பது. மோடியின் எண்ணமும் இதுதான்.

நாட்டில் இந்த மூன்றும் உருவானால், லஞ்ச லாவண்யங்கள் ஒழியும். அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும். நாட்டின் நிதிநிலை சீரடையும். உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்த, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்காக இறக்குமதிக்குத் தடை விதிக்கவும் சுங்க வரியை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீன நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் குறையும். இந்திய நிறுவனங்கள் மூடப்படாமல் பாதுகாக்கப்படும். ஆனால், இந்தியாவை மற்ற நாடுகள் சுயநலக்காரம என எண்ணலாம். ஆனால், இந்திய வர்த்தகத்தைக் காக்க என்ன விலையானாலும் கொடுத்தே ஆக வேண்டும்.


இதையும் படிங்க:
ஐநா போர்க்குற்ற தீர்மானத்தை வாபஸ் பெற இலங்கை திட்ட
ம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.