ETV Bharat / bharat

'அயோத்தி ஒன்றே அது இந்தியாவில் தான்' நேபாள பிரதமருக்குப் பதிலடி கொடுத்த விஸ்வ இந்து பரிஷத்!

author img

By

Published : Jul 15, 2020, 12:32 AM IST

டெல்லி: நேபாள பிரதமரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'அயோத்தி ஒன்றே அது இந்தியாவில் தான் உள்ளது' என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர்‌ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

vhp
vhp

நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி, காத்மாண்டுவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலாச்சார ரீதியாத நேபாளம் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும, வரலாற்று ரீதியாக பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது‌.

கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேபாளம் பிரதமருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் "அயோத்தி ஒன்றே அது இந்தியாவில் தான் உள்ளது" என விஸ்வ இந்து பரிஷத் (Vishwa Hindu Parishad) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார், " இந்தியாவில் உள்ள அயோத்தி தான் பகவான் ஸ்ரீ ராமின் ஒரே பிறப்பிடமாகும். ஒவ்வொரு ஆண்டும் அயோத்தியிலிருந்து தான் ஜனக்புரிக்கு ஸ்ரீ ராமர் செல்கிறார்.

ராமர் பிறந்த இடமான அயோத்தி பற்றிய தகவல்கள் இந்து வேதங்கள், ஜன்ஷ்ருதி, பழக்கவழக்கங்கள், மரபுகள், வரலாறு ஆகியவற்றில் வேறுபடவில்லை. ஒரே மாதிரியாக தான்‌ உள்ளது‌.

நேபாளம் பிரதமரின் கூற்றை அவரை தவர வேறு யாரும் நம்ப மாட்டார்கள். அவரின் திடீர் அறிக்கை ஒரு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தின் கீழ் வந்துள்ளதாக குற்றச்சாட்டினர். இரு நாட்டின் மதம், கலாச்சார,ஆன்மீக உறவுகளின் "பிணைப்பு சக்தி" தான் கடவுள் ராமர், கடவுள் பசுபதி.

நாட்டின் பராம்பரியத்தை வலியுறுத்திய அவர், இரு நாட்டின் இந்து சமூகங்களுக்கிடையேயான பிரிக்க முடியாத உறவை துண்டிக்க நினைத்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது " என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.