ETV Bharat / bharat

எம்.டி.ஏ. கூட்டணி அரசுக்கு எதிரான காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

author img

By

Published : Nov 12, 2020, 5:30 PM IST

சில்லாங்: மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி (எம்.டி.ஏ.) அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

எம்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது !
எம்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது !

மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா மீது அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து பல்வேறு ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறது.

கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையின்மை, சட்டவிரோதமாக இயங்கிவரும் நிலக்கரி சுரங்கங்கள், கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட பல பிரச்னைகளில் ஆளும் எம்.டி.ஏ. கூட்டணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா கொண்டுவந்தார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்ற சபாநாயகர் மெட்பா லிங்டோ, அதன் மீது குரல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.

மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களின் ஆதரவில் காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா நிலக்கரி சுரங்கம் மற்றும் போக்குவரத்துப் பிரச்னைகளை அவையில் எழுப்பினார்.

முகுல் சங்மாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் கான்ராட் கே சங்மா, "மாநில நலனுக்காக தனது அரசு ஆரம்பித்துள்ள பல வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

நல்லாட்சிக்காக நாட்டின் இரண்டாவது சிறந்த மாநிலமாக மேகாலயா பாராட்டப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இதுவரை மாநில அரசு சார்பில் 399 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. மேகாலயாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கொடுமைகள், வன்முறைகள் போன்ற குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.

மாநிலத்தில் சட்டவிரோதமாக எந்த நிலக்கரி சுரங்கமும் நகர்த்தப்படவில்லை. நிலக்கரி சுரங்கங்களின் இயக்கத்தை பணிக்குழு கண்காணித்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் 200 தொடக்கப் பள்ளிகள் உருவாக்க தேவையான நடவடிக்கைகளை கல்விக்குழு முன்னெடுத்துவருகிறது.

கல்வித் துறைக்காக ரூ.800 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு திரும்பிவந்துள்ள தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. விளையாட்டு மற்றும் இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுக்காக சலுகைகளை, உதவிகளை எம்.டி.ஏ. அரசு மேற்கொண்டுவருகிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.