ETV Bharat / bharat

நீங்கள் செய்த குற்றம் என்ன? முகம் பார்த்து ஜாதகம் சொல்லும் கிளி!

author img

By

Published : Mar 5, 2020, 12:16 PM IST

டெல்லி: குற்றவாளியை அடையாளம் காண மேம்படுத்தப்பட்ட தானியங்கி தொழில்நுட்ப முறையை பயன்படுத்தலாம் என உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் அறிவித்தது. இது அறிமுகப்படுத்தப்பட்டால் குற்றவாளிகளின் அடையாளத்தை விரைவில் கண்டுகொள்ளலாம்.

NCRB approves facial recognition  recognition to track criminals  Automatic Facial Recognition System (AFRS)  Minister of State for Home G Kishan Reddy  Union Home Ministry  தானியங்கி முக அங்கீகார முறை, மாநிலங்களவை, கிஷன் ரெட்டி
NCRB approves facial recognition recognition to track criminals Automatic Facial Recognition System (AFRS) Minister of State for Home G Kishan Reddy Union Home Ministry தானியங்கி முக அங்கீகார முறை, மாநிலங்களவை, கிஷன் ரெட்டி

குற்றவாளிகள், அடையாளம் தெரியாத இறந்த உடல்கள், காணாமல் போன, கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நபர்களை அடையாளம் காண தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) மேம்படுத்த தானியங்கி தொழில்நுட்ப முறையை (ஏ.எஃப்.ஆர்.எஸ்) பயன்படுத்தலாம் என்று, உள்துறை அமைச்சகம் புதன்கிழமை மாநிலங்களவையில் அறிவித்தது.

குற்றவாளிகளை தெளிவாக அடையாளம் காணும் நோக்கத்துடன், மேம்படுத்தப்பட்ட தானியங்கி தொழில்நுட்ப முறையை (AFRS) செயல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ மேம்படுத்தப்பட்ட தானியங்கி முகம் கண்டறியும் தொழில்நுட்ப முறையை காவலர்கள் பயன்படுத்தலாம். இதனால் அடையாளம் தெரியாத இறந்த உடல்கள், காணாமல் போன, கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நபர்களை சிறப்பாக அடையாளம் காண உதவும். இது தனியுரிமையை மீறாது" என்று அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கடந்தாண்டு வடகிழக்கில் கிளர்ச்சி, உயிரிழப்பு தொடர்பான சம்பவங்களில் 70 விழுக்காடு குறைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரெட்டி கூறினார்.

இதையும் படிங்க: இந்திய எல்லையில் அமைந்துள்ள துறைமுகங்களில் கொரோனா பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.