ETV Bharat / bharat

'மருமகனுக்கு 67 வகை உணவை ஏற்பாடு செய்த மாமியார்' வைரலாகும் காணொலி

author img

By

Published : Jul 9, 2020, 11:46 PM IST

அமராவதி: ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மருமகனுக்காக 67 வகையான உணவை சமைத்து அசத்தியுள்ளார். அதுகுறித்த காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

mother-in-law-provide-67-variety-food-for-son-in-law
mother-in-law-provide-67-variety-food-for-son-in-law

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் ரூபனகுடி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் அம்மாநிலத்தைச் சேர்ந்தப் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தரும் மருமகனின் மதிய உணவிற்காக 67 வகை கொண்ட உணவினை சமைத்துள்ளார்.

  • This lady has prepared a 67-item Andhra five-course lunch for her visiting son-in-law, consisting of a welcome drink, starters, chaat, main course and desserts! Wow! #banquet pic.twitter.com/Li9B4iNFvc

    — Ananth Rupanagudi (@rananth) July 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில் பல வகைப் பொறியல்கள், குழம்பு வகைகள், இனிப்பு வகைகள், நொருக்குத் தீனிகள், கேக், உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன. தற்போது அந்தக் காணொலி அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.

இதுவரை அந்தக் காணொலியை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அந்தக் காணொலி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரட்டை அர்த்த டிக்டாக் காணொலியில் பொழுதைக் கழிக்கும் 'காவல் உதவி ஆய்வாளர்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.