ETV Bharat / bharat

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர்கள் யார்... யார்? ஏன்?

author img

By

Published : Jun 15, 2019, 5:50 PM IST

Updated : Jun 15, 2019, 6:06 PM IST

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மூன்று மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

Mamta and KCR to skip NITI Aayog meeting

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு மீண்டும் ஆட்சியமைத்தற்கு பிறகு பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாநில முதலமைச்சர்களும் தலைநகர் டெல்லி விரைந்தனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உடல் நலக்குறைவு காரணமாகவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் காளீஸ்வரம் நீர்ப்பாசன திட்ட விழாவிற்கு தயாராகி வருவதாலும் பங்கேற்கவில்லை.

மேலும் மாநிலத்திற்கு எந்தவித நன்மையும் நிதி ஆயோக் தரவில்லை, அதனால்தான் பங்கேற்கப் போவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated :Jun 15, 2019, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.