ETV Bharat / bharat

மாமல்லபுரத்தில் சீன அதிபர், பிரதமர் மோடி 2ஆவது நாளாக பேசியது என்ன?

author img

By

Published : Oct 12, 2019, 1:33 PM IST

மாமல்லபுரம்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Mamallapuram sumit


கோவளம் தாஜ் ஓட்டலில் இரண்டாவது நாளாக நடந்த பேச்சுவார்த்தையின் சில முக்கிய பிரச்னைகள் இடம்பெற்றிருந்ததாக தகவல் கசிந்துள்ளது. மகாபலிபுரம் சிற்பத்தை பார்வையிட்டபடி பிரதமரும் சீன அதிபரும் நேற்று மாலை பேசிக்கொண்டனர். அப்போது அவருக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து இன்று இருவரும் கண்ணாடி அறைக்குள் தனியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி மட்டும் கலந்துகொண்டனர். அப்போது சீன- இந்திய மக்களிடையே தொடர்பை அதிகரிப்பது, ஆசிய பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டும் பொருட்டு இருநாட்டு எல்லைப்பகுதியில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப் பகுதி 3,500 கிலோ மீட்டர் கொண்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. ஏற்கனவே இருநாட்டு படைகளும் எல்லை விவகாரத்தில் கைகலப்பில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இருநாட்டு ஆளுமைகளும் இவ்விவகாரத்தை கையிலெடுத்திருப்பது புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து தனி விமானம் மூலமாக நேரடியாக சென்னைக்கு வருகைபுரிந்த ஜின்பிங், இன்று அதே விமான நிலையத்திலிருந்து நேபாளம் செல்லவுள்ளார்.

இதையும் படிக்கலாமே

மோடி - ஜின்பிங் சந்திப்பில் உடனிருந்த அந்த மூன்றாவது நபர்?

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.